2 தேசிய விருதுகள்: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ரஹ்மான் விடியோ வெளியீடு!

இந்தப் படத்தின் கதை நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று தோன்றியதால் இசையமைக்க ஒப்புக்கொண்டேன்...
2 தேசிய விருதுகள்: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ரஹ்மான் விடியோ வெளியீடு!

65-வது தேசியத் திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை தில்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக 'டு லெட் ' தேர்வாகியுள்ளது. சிறந்த திரைப்பட பின்னணி இசை, பாடல் இசைமைப்புக்கான இரு விருதுகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பின்னணி பாடகருக்கான விருது க்கு கே.ஜே. ஜேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து தனது மகிழ்ச்சியை விடியோ வழியாக வெளியிட்டுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். அதில் அவர் கூறியதாவது:

மணி ரத்னம், முக்கியமான மனிதர். அவரை ஐடியா கடல் என்றும் சொல்லலாம். நம்முடைய எந்த யோசனைகளையும் அதைப் பயன்படுத்தும் விதத்தில் கொண்டுவருவார். அதனால், என்னுடைய அருமை அண்ணன், வழிகாட்டி, சிறந்த மனிதரான மணிரத்னத்துக்கு மிக்க நன்றி. காற்று வெளியிடை பாடலாசியர்கள், படக்குழுவினருக்கு நன்றி.

மாம் படத்துக்கு நான் இசையமைக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்து என்னிடம் கேட்டார் ஸ்ரீதேவி. இந்தப் படம் மிகவும் சிறப்புமிக்கது. இந்தப் படத்தின் கதை நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று தோன்றியதால் இசையமைக்க ஒப்புக்கொண்டேன். ஸ்ரீதேவியின் இழப்பை மிகவும் உணர்கிறேன். தேசிய விருது கிடைத்ததற்கு மிகவும் சந்தோஷம். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com