40 நடிகைகள் நடிக்க மறுத்த படத்தைத் தயாரிக்கும் சதா!

இந்தக் கதையைக் கூறியபோது பாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டுமே என்று பலரும் மறுத்து விட்டனர்...
40 நடிகைகள் நடிக்க மறுத்த படத்தைத் தயாரிக்கும் சதா!

சதா நடிப்பில் உருவாகி வரும் டார்ச் லைட் படத்தை மஜீத் இயக்கிவருகிறார். இந்தப் படத்துக்கு கதாநாயகியாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார் சதா. 

இந்தப் படம் குறித்து இயக்குநர் மஜீத் கூறியதாவது:

நான் முதலில் இயக்கிய தமிழன் படம் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை சட்ட அறிவு அவசியம் தேவை என்று கூறியது. அதன் பிறகு சில சிறிய படங்கள் இயக்கினேன். ஆனால் டார்ச் லைட்டுக்கான விஷயம் மனத்தில் பதிந்தபோது இது என் லட்சியப் படமாகத் தெரிந்தது. நிச்சயமாக இப்படிப்பட்ட சமூக அவலத்தைச் சொல்லி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியது.

வறுமையைப் பயன்படுத்தி பெண் இனத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின்  வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். இந்தக் கதை தொடர்புடைய பலர் உண்மைச் சாட்சியங்களாகப்  உள்ளார்கள். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்தேன். 

நான் பல நடிகைகளிடம் இந்தக் கதையைக் கூறியபோது பாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டுமே என்று பலரும் மறுத்து விட்டனர். இப்படி 40 பேரிடம் கதை சொல்லியிருப்பேன். கடைசியில் சதாவிடம் கூறினேன். கதையைக் கேட்டு முடித்ததும் கண்ணீர் விட்டார். வீடியோப் பதிவுகளை எல்லாம் பார்த்து விட்டு கண் கலங்கினார். நடிக்கச் சம்மதம் என்றார். இப்படம் சதா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். நிச்சயம் அவருக்குப் பெரிய பெயரைப் பெற்றுத் தரும். அதே போல நடிகை ரித்விகாவும் கதை கேட்டு கலங்கிக் கண்ணீர் விட்டார். நிச்சயம் இப்படம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும். பெண்களின் கண்ணீர்க் கதைகள் பெண்களிடம் போய்ச் சேர வேண்டும். அப்போதுதான் அவர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள் என்று கூறியுள்ளார். 

சதா, ரித்விகா, புதுமுகம் உதயா, இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா ரங்கநாதன் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - சக்திவேல், இசை - ஜேவி, பாடல்கள் - வைரமுத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com