சீனாவில் மே 4 ஆம் தேதி வெளியாகவிருக்கும் பாகுபலி 2, பாகுபலி 1 ன் வசூல் சாதனையை முறியடிக்குமா?

சீனாவில் இதுவரை வெளியிடப்பட்ட இந்தியத் திரைப்படங்களுள் அமீர்கானின் டங்கல், சீக்ரெட் ஸ்டார் சல்மான் கானின் பஜ்ரங்கி பாயிஜான், இர்ஃபான் கானின் இந்தி மீடியம் உள்ளிட்ட திரைப்படங்களும், பாகுபலி 1 
சீனாவில் மே 4 ஆம் தேதி வெளியாகவிருக்கும் பாகுபலி 2, பாகுபலி 1 ன் வசூல் சாதனையை முறியடிக்குமா?

கடந்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான பாகுபலி 2 திரைப்படம் இந்தியாவில் ஈட்டிய வெற்றி இந்திய திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா பாட்டியா, ரம்யாகிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வெளியான அத்திரைப்படம் இன்றளவும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகும் வண்ணம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தந்த இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல சீனாவிலும் கூட படம் மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பாகுபலி படக்குழுவினருக்கு உண்டு. படம் சென்சார் முடிந்து மார்ச் மாதம் தான் அப்படத்தை சீனாவில் வெளியிடுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதோ அடுத்த மாதம் வெளியீடுக்குத் தயார்நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை வெளியிடப்பட்ட இந்தியத் திரைப்படங்களுள் அமீர்கானின் டங்கல், சீக்ரெட் ஸ்டார் சல்மான் கானின் பஜ்ரங்கி பாயிஜான், இர்ஃபான் கானின் இந்தி மீடியம் உள்ளிட்ட திரைப்படங்களும், பாகுபலி 1 திரைப்படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. இவற்றில் வசூலில் முந்தியது பாகுபலி 1 ஆ அல்லது அமீர்கானின் டங்கலா? என்றொரு சர்ச்சையும் கூட உண்டு. இப்போது பாகுபலி 2 வைப் பொருத்தவரை அது தனது முந்தைய ரெகார்டை உடைத்து அதை விட அதிகமாக வசூல் செய்ய வேண்டும் என்பதுமட்டுமே அதன் முன்னிருக்கும் ஒரே சவால். இதற்காக பாகுபலி 2 திரைப்படத்துக்கான சீனா வெளியீடுக்கு முன் அத்திரைப்படம் சீன மக்களுக்கு பிடித்தமான வகையில் அவர்களது ரசனைக்கு ஏற்றவாறு எடிட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சீன ரசிகர்களுக்குப் பிடித்தமான வகையில் படத்தை எடிட் செய்ய இன்கிரெடிபிள் ஹல்க் உள்ளிட்ட சிறந்த வெற்றிப்படத்தை எடிட் செய்தவரான பிரபல படத்தொகுப்பாளரான வின்செண்ட் தாபெய்லன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம். சீனாவிலிருந்து கசிந்த செய்திகளில் ஒன்று பாகுபலி 2 திரைப்படத்துக்கு பாகுபலி 1 ஐ விட அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். பாகுபலி 1 சீனாவில் 6000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. படம் சீன பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்களை காலி செய்கிறதா? இல்லையா என்பது மே 4 ஆம் தேதிக்குப் பிறகு தெரிய வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com