இந்தியப் பிரதமர் மோடியாக அவதாரம் எடுத்துள்ள கன்னட நடிகர்!

சில நாட்களுக்கு முன்னர் வலைத்தளங்களில் பிரதமர் மோடி ரயில் நிலையத்தில் காத்திருப்பது
இந்தியப் பிரதமர் மோடியாக அவதாரம் எடுத்துள்ள கன்னட நடிகர்!

சில நாட்களுக்கு முன்னர் வலைத்தளங்களில் பிரதமர் மோடி ரயில் நிலையத்தில் காத்திருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. ஆனால் அது மோடியின் படமல்ல மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டது. தற்போது அந்த புகைப்படத்தைப் பற்றிய தகவல்களும், அதில் பாரதப் பிரதமர் மோடியைப் போலவே இருப்பவர் யார் என்ற உண்மை வெளிவந்துள்ளது.

அவர் பெயர் எம்.பி.ராமச்சந்திரன். கன்னட படமான 'ஸ்டேட்மென்ட் 8/11' என்ற படத்தில் பிரதமர் மோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று காட்சிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியாக தோன்றுகிறார் ராமச்சந்திரன். ராமந்திரன் லுக்ஸ் அப்படியே பிரதமர் மோடியைப் போலவே உள்ளது என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அப்பி பிரசாத் திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்தை வினு கே.ஹெச் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டிலுக்கான காரணம் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மோடி அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு திட்டம்தான் என்றனர் படக்குழுவினர்.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்ட நிலையில் மே மாதம் ரிலீஸ் ஆகிறது. இதுபோன்ற காத்திரமான படைப்புக்களுக்கான எதிர்ப்பார்ப்பு அதிகம் உள்ளதும், அரசியல் சம்பவம் ஒன்றினை மையமாகக் கொண்டு ஒரு படம் வெளிவருவதும் பாராட்டத்த்தக்கது என்று நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com