உதவி இயக்குனர்கள் கூடிக் கொண்டாடிய "ஷங்கர் - 25" 

தமிழ் திரையுலகத்தில் அறிமுகமாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இயக்குநர் ஷங்கருக்கு அவரது உதவி இயக்குனர்கள் கூடி விழா எடுத்த நிகழ்வு நடந்துள்ளது.
உதவி இயக்குனர்கள் கூடிக் கொண்டாடிய "ஷங்கர் - 25" 

சென்னை: தமிழ் திரையுலகத்தில் அறிமுகமாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இயக்குநர் ஷங்கருக்கு அவரது உதவி இயக்குனர்கள் கூடி விழா எடுத்த நிகழ்வு நடந்துள்ளது.

இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குநர் ஷங்கர். பின்னர் அர்ஜுன், மதுபாலா, நம்பியார், மனோரமா மற்றும் சரண்ராஜ் ஆகியோர் நடிப்பில் 'ஜென்டில்மேன்' திரைப்படத்தை இயக்கினார். மிகப் பெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்படமானது 30.07.1993 அன்று வெளியானது. எனவே நேற்று முன்தினம் திங்கள்கிழமையோடு ஷங்கர் திரையுலகில் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இதனைத் தொடர்ந்து ஷங்கரின் உதவி இயக்குநர்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு நிகழ்வு நடத்த தீர்மானித்தனர். இந்த நிகழ்வு பற்றிய விபரங்களை பாய்ஸ் மற்றும் அந்நியன் ஆகிய திரைப்படங்களில் அவரது உதவி இயக்குனராக பணிபுரிந்தவரும், 'ஈரம்' திரைப்படத்தை இயக்கியவருமான அறிவழகன் கூறியதாவது:

பாலாஜி சக்திவேல், வசந்த பாலன் மற்றும் மாதேஷ் உள்ளிட்ட அவரது மூத்த உதவி இயக்குநர்கள் முதல் நான், அட்லீ உள்ளிட்ட இளைய இயக்குநர்கள் மற்றும் அவரது தற்போதைய உதவி உயக்குனர்கள் வரை என அனைவரும் சேர்ந்து கடந்த மூன்று மாதங்களாக இந்நிகழ்வை திட்டமிட்டு வந்தோம். நாங்கள் அடிக்கடி கூடி இந்த நிகழ்வை எப்படி நடத்துவது என்று திட்டமிட்டு வந்தோம். ஒரு மாதத்திற்கு முன்னர் ஷங்கரிடம் இதனைத் தெரிவித்து தேதி கேட்டோம், ஜென்டில்மேன் படம் வெளியான அதே ஜூலை 30-ஆம் தேதியன்று அவர் ஓய்வாக இருந்து, நிகழ்வில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். அதனை அடுத்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த நிகழ்வு நடத்துவதாகத் தீர்மானித்தோம்.

இந்த நிகழ்வில் ஏறக்குறைய 30 பேர் கலந்து கொள்வதாகத் திட்டம்.ஆனால் பல்வேறு தவிர்க்க இயலாத காரணங்களால் சிலர் கலந்து கொள்ளவில்லை. பின்னர் ஒவ்வொருவரும் ஷங்கர் சாருடனான எங்களது அனுபவங்களை தனியாக எழுதி, பின்னர் அதனைத் தொகுத்து ஒரு புத்தகமாக மாற்றினோம். அதே சமயம் அவருடன் நாங்கள் பணிபுரியும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் புத்தகத்தில் இடம் பெற்றன. நிகழ்வில் தனக்கு வழங்கப்பட்ட இந்தப் பரிசினைப் பார்த்து ஷங்கர் சார் நெகிழ்ந்து விட்டார்.

அதேசமயம் நிகழ்வில் நாங்கள் அனைவரும் எங்கள் ஒவ்வொருவருக்கும்  இயக்குனர் ஷங்கருக்கும் உள்ள தொடர்பு அதாவது அவரை முதன்முதலாக சந்தித்தது முதல், உதவி இயக்குநராக எங்களை அவர் தேர்வு செய்தது வரையிலான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். ஒரு இயக்குநராக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் அவர் எங்கள் மீது செலுத்தியுள்ள பாதிப்பு குறித்து விரிவாகப் பேசினோம், சுருக்கமாக இது மனதினை மிகவும் நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வாக அமைந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com