ஃபேஷன் என்ற பெயரில் ஜெனிஃபர் லோபஸ் செய்த அட்டூழியம்!

சில நெட்டிஸன்கள், ஜெனிஃபர் இந்திய டாய்லெட்டுகளுக்குப் பொருத்தமாக இப்படி ஒரு உடையணிந்திருக்கிறார் என்று கூட இந்த ஷூ பற்றிக் கேலி செய்கிறார்கள்.
ஃபேஷன் என்ற பெயரில் ஜெனிஃபர் லோபஸ் செய்த அட்டூழியம்!

பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸின் லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்தீர்களா? அடடே! இன்னும் பார்க்கவில்லை என்றால் உங்களுக்கு ஜென்ம சாபல்யம் ஏது? உடனே பார்த்து விடுங்கள்... ஆனால், பார்த்த மாத்திரத்தில் அவரைத் தவறாக மட்டும் எடை போட்டு விடாதீர்கள். ஐய்யே! இதென்ன பொது இடத்தில் இந்தப் பெண் இப்படி பேண்ட்டை நழுவ விட்டுக் கொண்டு நிற்கிறாரே? ஃபேஷன் என்ற பெயரில் என்ன கருமம் இது? என்று அவரைப் புழுதி வாரித் தூற்றத் தொடங்கி விடாதீர்கள். உண்மையில் அது ஃபேண்ட் இல்லை ஐயா! டெனிம் துணியில் தைக்கப் பட்ட ஷூக்கள். அதைத்தான் அம்மணி பேண்ட் நழுவி விழும் ஸ்டைலில் அணிந்து கொண்டு தரிசனம் தந்திருக்கிறார். இந்தக் காட்சியை இணையத்தில் கண்ட பலரும் அதைப் பற்றி ட்ரால் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சில நெட்டிஸன்கள், ஜெனிஃபர் இந்திய டாய்லெட்டுகளுக்குப் பொருத்தமாக இப்படி ஒரு உடையணிந்திருக்கிறார் என்று கூட இந்த ஷூ பற்றிக் கேலி செய்கிறார்கள். அதெல்லாம் போக, ஜெனிஃபர் அணிந்திருக்கும் அந்த டெனிம் ஷூவின் ஸ்பெஷலிட்டி என்ன தெரியுமா? அது பார்க்க ஷூ போலவே இல்லை. நழுவி விழும் பேண்ட் போலவே இருக்கிறது என்பது தான். அப்புறம் நெட்டிஸன்களின் கலாய்த்தலுக்கு சொல்ல வேண்டுமா? ஜெனிஃபருக்கு வேண்டியதும் அது தானே! எப்படியாவது ஒருவகையில் அவரது பெயர் சமூக ஊடகங்களிலும், செய்திகளிலும் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டாக வேண்டும். அதற்காகத்தான் இத்தனை அட்டூழியமும். அட்டூழியம் என்றதும் என்னவோ மிகப்பெரிய அராஜகம் என்று நினைத்து விடாதீர்கள். தமிழில் சேட்டைக்கும் ‘அட்டூழியம்’ என்று தான் பொருள் பாஸ்!

ஜெனிஃபர் அணிந்துள்ள இந்த டெனிம் ஷூவை வடிவமைத்திருப்பது வெர்சாக் எனும் ஃபேஷன் நிறுவனம். அந்நிறுவனத்தின் புத்தம் புதிய டெனிம் ஷூக்களை அறிமுகப்படுத்தவும், மார்க்கெட்டிங் செய்யவும் தான்  ஜெனிஃபர் அதை அணிந்து கொண்டு அப்படி நடமாடியிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com