திட்டமிட்டபடி நாளை வெளியாகும் கமலின் ‘விஸ்வரூபம் 2’

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகவுள்ளது.
திட்டமிட்டபடி நாளை வெளியாகும் கமலின் ‘விஸ்வரூபம் 2’

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகவுள்ளது.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் புதன்கிழமை மாலை வரை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10 அதாவது நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கருணாநிதியின் மறைவையொட்டி படம் அதே நாளில் வெளியாகுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 10-க்குப் பதிலாக ஆகஸ்ட் 15 அன்று வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. 

ஆனால் இன்று வெளியான விளம்பரங்களின்படி, விஸ்வரூபம் 2 படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது. 

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் 2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக, ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஸ்வரூபம் 2 படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இசை - ஜிப்ரான், பாடல்கள் - வைரமுத்து, கமல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com