அடுத்த 6 மாதங்களுக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை - பொதுக்குழுவில் தீர்மானம் 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கென தனிக் கட்டடம் உருவாக்கப்பட்டு வருவதால் அந்தப் பணிகளை முடிக்கும் வகையில் அடுத்த 6 மாதங்களுக்கு சங்கத் தோ்தல் இல்லை என நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளத
கோப்புப்படம்
கோப்புப்படம்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கென தனிக் கட்டடம் உருவாக்கப்பட்டு வருவதால் அந்தப் பணிகளை முடிக்கும் வகையில் அடுத்த 6 மாதங்களுக்கு சங்கத் தோ்தல் இல்லை என நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-ஆவது பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு சங்க வரவு-செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. 

தற்போது நாசர் தலைமையில் செயல்பட்டு வரும் நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடையவுள்ளது. இதையடுத்து அடுத்ததாக 2018-2012-ஆம் ஆண்டுக்கான தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

நாசர் தலைமையிலான நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பான தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காக தனிக்கட்டடம் என்ற கோரிக்கை அடிப்படையில் தற்போது சென்னை தியாகராய நகரில் உள்ள வணிக வளாகத்தில் கட்டடம் எழுப்பப்பட்டு வருகிறது. 

அந்தக் கட்டடத்தை கட்டி முடிக்கும் வகையில் தற்போதுள்ள நிர்வாகம் தொடர்ந்தால் நல்லது என்று நிர்வாகத்தின் சார்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு நடிகர் சங்கத்துக்கு தேர்தல் இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும், நடிகர்கள் விஜயகுமார், ஆனந்தராஜ், விஜய்சேதுபதி உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com