ஜி டிவியின் அட்டகாசமான வெப் தொடர் கள்ளச்சிரிப்பு!

தன்னை இந்தச் சமுதாயத்தில் சரியான விதமாக வெளிப்படுத்திக் கொள்ள ஒருவர் எவ்வளவு தூரம் முயற்சி செய்வார்?
ஜி டிவியின் அட்டகாசமான வெப் தொடர் கள்ளச்சிரிப்பு!

ஜானர்: திகில் / டிராமா | மொழி: தமிழ் | எபிசோடுகள்: 8 | நேரம்: 22 நிமிடம்

எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்னைகள், கவலைகள் உண்டு. ஆனால் யாரும் எவ்வித மனநிலையில் இருந்தாலும் சரி, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்றால், கேமராவுக்கு முன் அதையெல்லாம் மறைத்து, உடனடியாக ஒரு சிரிப்பை உதிர்ப்பார்கள். அந்த சிரிப்பின் அர்த்தம் என்ன? அது உண்மையான புன்னகைதானா? அது தான் 'கள்ளச்சிரிப்பு' எனும் வெப் தொடரின் கான்செப்ட். புகைப்படம் சார்ந்த விஷயங்கள் தான் இதன் மெல்லிய சரடு. ஒருவர் தன் முகத்தை மறைத்து போலியாக வாழ்ந்தால் அது அவருக்கும் அவர் சார்ந்த சமூகத்துக்கும் எவ்வளவு ஆபத்தை விளைவிக்கும் என்பதை இக்கதை விளக்கும்.

தன்னை இந்தச் சமுதாயத்தில் சரியான விதமாக வெளிப்படுத்திக் கொள்ள ஒருவர் எவ்வளவு தூரம் முயற்சி செய்வார்? இந்தக் கதையின் மையம் அதுவே.  24 வயதுப்  தன், விருப்பத்துக்கு மாறாக, பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்கிறாள். ஒரு பிரச்னையில் கணவனைக் கொலை செய்துவிடுகிறாள். அந்தக் கொலையை மறைக்க காதலனின் உதவியைக் கோர, அவன் அங்கு வருகிறான். அதே சமயத்தில் அவளது பெற்றோர் அங்கு எதிர்பாராத விதமாக வர, கணவனின் உடலையும், காதலனையும் மறைத்து வைக்க வேண்டும். இதைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், எதிர்பாராத திருப்பங்கள் என விறுவிறுப்பாக இந்த வெப் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எபிஸோடிலும் அந்தந்த வாரத்தின் மர்ம முடிச்சுக்கள் விடுவிக்கப்படும்.

இந்த ஷோ திரில்லர், டார்க் காமெடி மற்றும் காதல் போன்ற பல ஜானர்களில் இருக்கும். மொத்தத்தில் பரபரப்பான த்ரில்லர் டிராமா ஜானர் இது.  மேலும் இது போன்ற சர்வதேச நிகழ்ச்சி எதுவும் இல்லை. இதன் கான்செப்ட்,  கதைக் கரு, காட்சிப்படுத்தும் வகை மற்றும் கதாபாத்திரங்கள் என எல்லாமே தனித்தன்மையானவை. புத்தம் புதிது.

ஆண்கள், பெண்கள் உள்பட 18-35 வயதிற்குள் இருப்பவர்கள்தான் இந்நிகழ்ச்சிக்கான பார்வையாளர்களின் இலக்கு (டார்கெட் ஆடியன்ஸ்).  பெண் மையக் கதை என்பதால் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.சுவாரஸ்யமான, நகைச்சுவையான அதே சமயம் தீவிரம் குறையாமல் அது இருக்கும்.

கதாநாயகி அம்ருதா ஸ்ரீனிவாசன் தமிழ் டிஜிட்டல் நடிகர்களில் மிகப் பிரபலமானவர். இவர் 3 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நல்ல  கதை சொல்லியான ரோஹித் நந்தகுமார் வெப் சீரிஸில் முதன் முதலாக இயக்குனராக அறிமுகமாகிறார். கார்த்திக் சுப்பராஜ் (திரைப்படஇயக்குநர் மற்றும் ஸ்டோன் பெஞ்சின் தயாரிப்பாளர்) இவர் இயக்கிய மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தவை (பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி). அவரது 4-வது படம், பிரபு தேவா நடிப்பில் வெளியான மெளனப் படமான மெர்க்குரி.

இந்த வெப் தொடரை தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் , பெங்காலி, மராத்தி,மலயாளம், தெலுங்கு மொழிகளிலும் தயாரித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரங்களுக்கு Facebook.com/ZEE5, Twitter.com/ZEE5India, மற்றும் Instagram.com / ZEE5  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com