சமூகவலைத்தளங்களில் வெளியான 2.0 படத்தின் புதிய மேக்கிங் விடியோ!

பிபிசி ஊடகம் சார்பாக எடுக்கப்பட்ட விடியோ என்றொரு 2.0 படத்தின் புதிய மேக்கிங் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது...
சமூகவலைத்தளங்களில் வெளியான 2.0 படத்தின் புதிய மேக்கிங் விடியோ!

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.  நவம்பர் 29 அன்று, அதாவது தீபாவளிக்குப் பிறகு 2.0 படம் வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம்  சமீபத்தில் தகவல் அளித்தது.

இந்நிலையில் பிபிசி ஊடகம் சார்பாக எடுக்கப்பட்ட விடியோ என்றொரு 2.0 படத்தின் புதிய மேக்கிங் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த விடியோவில் ஏமி ஜாக்ஸன் பிரதானமாக இடம்பெற்றுள்ளார். 3டி தொழில்நுட்பக் கலைஞர், நடனக்கலைஞர், ஏமி ஜாக்ஸன் ஆகியோர் 2.0 படம் குறித்து இந்த விடியோவில் உயர்வாகப் பேசியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com