பிரபல தெலுங்கு நடிகரின் தந்தை கார் விபத்தில் மரணம்

ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆர் மகன் ஹரிகிருஷ்ணா நல்கொண்டா அருகே கார் விபத்தில் புதன்கிழமை உயிரிழந்தார்.
பிரபல தெலுங்கு நடிகரின் தந்தை கார் விபத்தில் மரணம்

ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆர் மகன் ஹரிகிருஷ்ணா, நல்கொண்டா அருகே கார் விபத்தில் புதன்கிழமை உயிரிழந்தார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் மகன் ஹரிகிருஷ்ணா (61), கார் விபத்தில் உயிரிழந்தார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரின் தந்தை ஆவார். 

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே கார் விபத்தில் படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரும் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், ஆந்திர அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். 

இவரது மறைவு தெலுங்கு திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பலர் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com