அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளராக இமான் தேர்வு!

வீரம் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத்தும் வேதாளம், விவேகம் படங்களுக்கு அனிருத்தும் இசையமைத்தார்கள்...
அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளராக இமான் தேர்வு!

அஜித் - சிவா மீண்டும் இணையும் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளராக இமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் ஆரம்பமாகவுள்ளது.  தீபாவளி அன்று வெளியாகும் இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கிவருகிறார்.

சிவா இயக்கிய வீரம்  படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விசுவாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித். 

இதற்கு முன்பு சிவாவின் இயக்கத்தில் நடித்த மூன்று படங்களும் நல்ல வசூலை அடைந்ததால் மீண்டும் அவருக்கு வாய்ப்பளித்துள்ளார் அஜித். விசுவாசம் படமும் வெற்றியடைந்தால் ஐந்தாவது முறையாக அஜித் - சிவா இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அஜித்-சிவா கூட்டணியில் உருவான வீரம் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத்தும் வேதாளம், விவேகம் படங்களுக்கு அனிருத்தும் இசையமைத்தார்கள். இந்நிலையில் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளராக இமான் தேர்வாகியுள்ளார். டிக் டிக் டிக் பட இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன், விசுவாசம் படத்துக்கு இமான் இசையமைப்பதற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com