பேட்மேன் படத்துக்கு இளையராஜாவைத் தேர்வு செய்யாதது ஏன்?: இயக்குநர் பால்கி விளக்கம்

வட இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இசையாக இருக்கவேண்டும் என விரும்பினோம்... 
பேட்மேன் படத்துக்கு இளையராஜாவைத் தேர்வு செய்யாதது ஏன்?: இயக்குநர் பால்கி விளக்கம்

தமிழரும் பிரபல இயக்குநருமான பால்கி இயக்கத்தில் உருவான 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படம் இன்று வெளியாகியுள்ளது. அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர். 

இதுவரை பால்கி இயக்கிய அனைத்து படங்களுக்கும் இசையமைத்தவர், இளையராஜா. ஆனால் பேட்மேன் படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இதனால் இளையராஜா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்நிலையில் பேட்மேன் படத்துக்கு இளையராஜாவைத் தேர்வு செய்யாமல் அமித் திரிவேதியைத் தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு இயக்குநர் பால்கி அளித்த பேட்டியில் கூறியதாவது: 

ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த கிராமிய இசை படத்துக்குத் தேவைப்பட்டது. வட இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இசையாக இருக்கவேண்டும் என விரும்பினோம். திரிவேதி அதற்குப் பொருத்தமாக இருந்தார். 

இளையராஜா சாரிடம் பணிபுரிவதைக் கொடுப்பினையாக எண்ணுகிறேன். எனது அடுத்தப் படத்தில் மீண்டும் இளையராஜாவுடன் இணைகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com