"நடிகர் சங்க கட்டடப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்'

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் தெரிவித்தார்.
ஆண்டு விழாவில் பேசுகிறார் தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலர் நடிகர் விஷால்.
ஆண்டு விழாவில் பேசுகிறார் தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலர் நடிகர் விஷால்.

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் தெரிவித்தார்.
காரைக்குடி இசை } நாடக நடிகர் சங்கத்தின் சார்பில் கண்ணதாசன் மணிமண்டபத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற சங்கரதாஸ் சுவாமிகளின் 95}ஆம்ஆண்டு குருபூஜை விழா மற்றும் சங்கத்தின் 30}ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு நடிகர் விஷால் பேசியது:
நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லாமல் இருந்தேன். ஆனால், அந்த எண்ணத்தை ஏற்படுத்தியவர் நடிகர் பூச்சி முருகன்தான். அவர் சங்கத்தின் பிரச்னைகளை விளக்கிக் கூறியதால் நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும், அதன்மூலம் சங்கத்துக்கும், நடிகர்களாகிய உங்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். 
தற்போது நடிகர் சங்கத்தின் கணக்குகள் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்படுகின்றன. 
நடிகர் சங்கக் கட்டடத்திற்காக முதலாண்டில் கலைநிகழ்ச்சி நடத்தி ரூ. 9 கோடி திரட்டினோம். இரண்டாவது ஆண்டு கலைநிகழ்ச்சியில் இதுவரை ரூ. 11 கோடி கிடைத்திருக்கிறது. இன்னும் ரூ. 2.50 கோடி வரும் என்கிற நம்பிக்கை உள்ளது.
வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணிகளை முடித்து விடுங்கள் என்று பொறியாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். நலிந்த கலைஞர்களுக்கு உதவித்தொகையை அதிகமாக தர வேண்டும். நடிகர் சங்கக் கட்டட அரங்குகள் சிறப்பாக அமைய வேண்டும். அப்பணி முடிந்ததும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றார்.
விழாவில் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி தலைமை வகித்துப் பேசினார். நடிகர் பூச்சி முருகன், சின்னத்திரை நடிகர் திருமுருகன், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, காரைக்குடி இசை } நாடக நடிகர் சங்கத் தலைவர் பி.எல். காந்தி, காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ என். சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
திறமையும், மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமும் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கமல், ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து காலம்தான் பதில் சொல்ல வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் குறித்து தேதி அறிவித்தவுடன் எனது நிலைப்பாடு குறித்து தெரிவிப்பேன். 
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். வாக்காளர் என்கிற முறையில் நானும் விரும்புகிறேன். விரைவில் அந்த மாற்றம் நடந்தே தீரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com