கூவக் கூவ... இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் மற்றுமொரு கொலைவெறிப் பாட்டு!

தமிழில் கூகை என்றால் ஆந்தை என்று பொருள். அதை பேச்சு வழக்கில் சொல்லும் போது கூட ‘கூக’ என்று சொல்வார்களே தவிர ‘கூவ’ என்று சொல்லக் கேள்வி இல்லை.
கூவக் கூவ... இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் மற்றுமொரு கொலைவெறிப் பாட்டு!

கூவக் கூவ... முட்டாக் கூவ ஆக்கங்கெட்ட கூவ... இது வசை இல்லை பாட்டுங்க பாட்டு!

“ஒண்டி மனசச் சாத்தி - ஒரு
கொண்டிப் பூட்டப் பூட்டி
தொறவா தூக்கிப் போட்டு - அட
பொறவா தேடிப் போற...”

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒன்றாக ஒரிஜினல்ஸ் கம்பெனி பேனரில் வெளிவந்துள்ள இந்தப் பாடலின் நடன இயக்குனர் சதிஷ்.

தமிழில் கூகை என்றால் ஆந்தை என்று பொருள். அதை பேச்சு வழக்கில் சொல்லும் போது கூட ‘கூக’ என்று சொல்வார்களே தவிர ‘கூவ’ என்று சொல்லக் கேள்வி இல்லை. வட்டார மொழிவழக்கில் கூவ என்பது ஒரு வசைச்சொல். பிறகெப்படி இந்தப் பாடலில் ஆந்தை என்ற பொருளில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. பாடலாசிரியர் மதன் கார்க்கியாம். அவருக்குத் தெரியாமலா அந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பார்?! கூகை எப்படியும் இலக்கணப் பிழையோடு கூட கூவயாக முடியாது. ஆனால் இந்தப் பாடலில் பல இடங்களில் ஆந்தை என்ற பொருள் வரும்படி இந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். முன்னெச்சரிக்கையாக பாடலின் துவக்கத்தில் கூகையைப் பற்றிய விளக்கம் வேறு தருகிறார்கள். கூகை எப்படி கூவயாயிற்று என்று மதன் கார்க்கி தான் சொல்ல வேண்டும்.

அட கூகைக்கு வந்த சோதனையே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com