தலைவியுமாய் நிற்கும்: ஒரே டேக்கில் குறும்படம் எடுத்த திரைப்பட கல்லூரி மாணவர்

தலைப்பே வித்தியாசமாக உள்ளதே என்று பார்த்தால் படமும் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டு வித்தியாசமாக உள்ளது.

தலைப்பே வித்தியாசமாக உள்ளதே என்று பார்த்தால் படமும் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டு வித்தியாசமாக உள்ளது.
தரமணியில் அரசு திரைப்படக் கல்லூரியில் படித்துவரும் ஹரி குமரன் என்ற மாணவர் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.
காதலர்கள். காதலனை நம்பி அவன் அழைக்கும் இடத்துக்குச் செல்கிறாள் காதலி. அங்கு எதிர்பாராதவிதமாக அவளை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு பாலியல் தொல்லை அளிக்க முயற்சி செய்கிறது.
காப்பற்ற முயற்சி செய்ய வேண்டிய காதலன், அந்த கும்பலின் காலில் விழுந்து தப்பிச் செல்கிறான். அந்த இளம்பெண்ணுக்கு என்ன ஆனது?
எதேச்சையாக அங்குவரும் அவளது நண்பரால் காப்பற்றப்படுகிறாள்.
மன்னிப்பு கோரி தன்னை ஏற்றுக்  கொள்ளுமாறு கேட்கும் காதலனை அவமதித்து தைரியமாக அவனை விட்டு பிரிகிறாள். தலைவியாய் நிற்கிறார். காப்பற்றிய நண்பர் அவளுக்கு தைரியம் ஊட்டுகிறான். இதுதான் படத்தின் கதை.
ஆனால், பெரும்பாலான காட்சிகள் படத்தில் இல்லை. குறும்படம் ஆயிற்றே. அதனால், வசனங்கள் வாயிலாகவே கதையை நமக்கு கடத்துகிறார் இயக்குநர். கூர்மையான வசனத்தால் கவனம்  ஈர்க்கிறார். பெண் என்பவள் எந்த விஷயத்தையும் தைரியமாக கையாள வேண்டும் என்று இந்தப் படத்தின் மூலம் கூற விரும்புகிறார் என்று கருதுகிறேன்.
படம் வெறும் 7 நிமிடங்கள்தான். கதை அனைத்தும் ஒரே வீட்டுக்குள் நடக்கிறது. பல முறை ஒத்திகை பார்த்து எடுத்தால் மட்டுமே ஒரே டேக்கில் எடுப்பது சாத்தியம். ஒரு இடத்தில் கேமரா அவுட் ஆஃப்  போகஸ் ஆகிறது. மற்றபடி திறமையாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சிலம்பொலி சொக்கலிங்கம்.
இந்தப் படத்தில் கவரக் கூடிய மற்றோர் அம்சம் இசை. டைட்டில் கார்டு போடுவதில் இருந்தே தொடங்கி விடுகிறது பின்னணி இசை.காட்சியின் தன்மை உணர்ந்து சிறப்பாக இசை அமைத்திருக்கிறார் யுதிஸ்தரன். இவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. குபேந்திரனின் எடிட்டிங்கும், விக்னேஷின் ஒலிப்பதிவும் அருமை. 
மொத்த கதையிலும் இருப்பது 3 கதா பாத்திரங்கள் மட்டுமே. 'தலைவியாய்' நடத்திருக்கும் வனிதா மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வசனங்களையும் மிக அருமையாக உச்சரிக்கிறார். ராகுல் கண்ணன், ஜெய்தேவ் சுப்ரமணியம் ஆகிய இருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கின்றனர். படம் முடிந்தவுடன் என்ட் கார்டில்  ஒரு பாடல் ஒலிக்கிறது. அந்தப் பாடலை எழுதியிருக்கும் பரத் குமாருக்கு பாராட்டுக்கள். ஒட்டுமொத்த படக்குழுவினரும் சிறப்பாக இயங்கி ஒரு நல்ல படத்தை உருவாக்கி இருக்கின்றனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.
குறும்படம் யூ-டியூபில் காணக் கிடைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com