காதலர் தினத்தன்று மனைவியை விவாகரத்து செய்த ‘கனா காணும் காலங்கள்’ நடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

கனா காணும் காலங்கள் நாடகத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் யுதன் பாலாஜி காதலர் தினமான நேற்று தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
காதலர் தினத்தன்று மனைவியை விவாகரத்து செய்த ‘கனா காணும் காலங்கள்’ நடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

கனா காணும் காலங்கள் நாடகத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் யுதன் பாலாஜி காதலர் தினமான நேற்று தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அந்தச் செய்தியை தனது முகநூல் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டும் உள்ளார்.

ஒரு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் 2006 முதல் 2008 வரை ஒளிபரப்பாகி பலரது வரவேற்பைப் பெற்ற ஒரு வித்தியாசமான நாடகமான கனா காணும் காலங்கள் நாடகத்தில் ஜோ என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் யுதன் பலாஜி. அதைத் தொடர்ந்து ‘பட்டாளம்’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘நகர்வலம்’ போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார். இவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாகாத நிலையில் தன் மனைவி ப்ரீத்தியை நேற்று விவாகரத்து செய்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்னைகளும், சண்டைகளும் நேர்ந்த நிலையில் சுமூகமாக பிரிந்து விடலாம் என முடிவு எடுத்துள்ளனர். இவர்களது விவாகரத்து வழக்கு கடந்த சில மாதங்களாக நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று முடிவிற்கு வந்து இருவரும் அதிகாரப் பூர்வமாக பிரிந்துள்ளனர். 

தன்னுடைய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது “அனைவரும் காதலர் தினத்திற்கு என்ன பிளான் எனக் கேட்டீர்கள், ஆனால் எங்களுக்குக் கடவுளே ஒரு வித்தியாசமான ஒரு பிளானை போட்டிருந்தார் போல. காலையில் வழக்கம் போல் எழுந்தேன், நீதிமன்றம் சென்றேன், அங்கு எங்களுக்கு விவாகரத்து உறுதியானது. என்ன இருந்தாலும் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான காதலர் தின நல்வாழ்த்துக்கள்” எனப் பதிவேற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் காதலர் தினத்தில் இப்படியொரு சோகமா? என தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com