அக்‌ஷய் குமார் நடித்த பேட்மேன்: முதல் வார வசூல் எவ்வளவு?

முதல் நாளன்று ரூ. 10.26 கோடி வசூலித்த பேட்மேன் அடுத்த இருநாள்களில் ரூ. 13.68, ரூ. 16.11 கோடிகளை வசூலித்தது...
அக்‌ஷய் குமார் நடித்த பேட்மேன்: முதல் வார வசூல் எவ்வளவு?

தமிழரும் பிரபல இயக்குநருமான பால்கி இயக்கத்தில் உருவான 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படம் கடந்த வாரம் வெளியானது. அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர்.

இந்தப் படம் தனது முதல் வாரத்தில் இந்தியாவில் ரூ. 63 கோடியை வசூல் செய்துள்ளது. முதல் நாளன்று ரூ. 10.26 கோடி வசூலித்த பேட்மேன் அடுத்த இருநாள்களில் ரூ. 13.68, ரூ. 16.11 கோடிகளை வசூலித்தது. வார நாள்களிலும் நல்ல வசூலைக் கண்ட பேட்மேன், முதல் வாரத்தில் ரூ. 63 கோடி வசூலித்து திரையுலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் இந்தப் படம் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com