வாழ்க்கையில் நண்பரைத் தேர்ந்தெடுக்க ரூல்ஸ் கிடையாது! விஜய் சேதுபதி பேட்டி

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து இயல்பாக நடித்து மக்கள் செல்வனாக மலர்ந்தவர் விஜய் சேதுபதி.
வாழ்க்கையில் நண்பரைத் தேர்ந்தெடுக்க ரூல்ஸ் கிடையாது! விஜய் சேதுபதி பேட்டி

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து இயல்பாக நடித்து மக்கள் செல்வனாக மலர்ந்தவர் விஜய் சேதுபதி. அண்மையில் அவர் ஒரு பேட்டியில் கூறியது, ‘வாழ்க்கையில் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க எவ்விதமான திட்டமிடல் இருக்காது. பார்த்துப் பேசிப் பழகும் போது பிடித்திருந்தால் அந்த பந்தம் மனத்துக்கு நெருக்கமாகும். அது போலத்தான் கதையும்.

நான் ஒவ்வொரு கதையையும் ஒரு உயிராகத் தான் பார்க்கிறேன். ஒரு மனுஷனாகத்தான் நினைக்கிறேன். எல்லாத்துக்கும் ஒரு குணம் இருக்கு, எல்லாத்துக்கும் ஒரு கேரக்டரைசேஷன் இருக்கு. அந்த கதாபாத்திரம் பிடிச்சிருந்தா நிச்சயம் அதை ஏற்று நடிப்பேன். அது எனக்கு சரியாக வரும்னு முதல்ல நான் நம்பணும். என்னோட பெஸ்ட் இதுல தர முடியும்ங்கற நம்பிக்கை ஏற்பட்டால்தான் அது வொர்க் அவுட் ஆகும். 

இன்னொரு முக்கியமான விஷயம் டைரக்டர்ஸ். நாம ஒரு படம் முடியற வரைக்கும் அந்த இயக்குநரோடத் தான் வேலை செய்யணும். அவரோட வேவ் லென்த் நம்முடையதோட ஒத்திசைவா இருக்கணும். அவரோட புத்தி, குணம், நடவடிக்கை, ஆட்டிட்யூட் எல்லாம் பிடிக்கணும். அது இல்லாவிட்டால் வேலை செய்ய முடியாது. தினமும் அவர் கூடத்தான் நேரம் செலவழிக்கணும், பேசணும் இண்டராக்ட் பண்ணனும். அவரோட சிந்தனையை புரிஞ்சிக்கிட்டுத்தான் வேலை செய்யணும். ஒத்து வரலைன்னா ஒர்க் அவுட் ஆகாது.

ஒவ்வொரு நாளும் எரிச்சலுடன் வேலை செய்யறது எனக்கு பிடிக்காது. நமக்கு பிடிச்ச வேலையை ஆத்மார்த்தமான செஞ்சாதான் அதோட பலன் ஸ்க்ரீன்ல தெரியும். ஒரு படத்துல நடிக்கறதுக்கு முன்னால் இப்படி பல விஷயங்கள்ல நான் தெளிவா இருப்பேன்.’ என்றார் விஜய் சேதுபதி.

தெளிவும் நம்பிக்கையும் வெற்றியின் ரகசியம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com