பாலியல் குற்றங்களுக்கு நடிகைகளே காரணம் என்று குற்றம் சாட்டும் பெண் தயாரிப்பாளர்!

பாலியல் குற்றங்களுக்கு நடிகைகளே காரணம் என்று குற்றம் சாட்டும் பெண் தயாரிப்பாளர்!

நடிகைகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்து தயாரிப்பாளர்களை எதிர்த்து ஹாலிவுட்டில் தொடங்கிய #MeToo

நடிகைகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தும் தயாரிப்பாளர்களை எதிர்த்து ஹாலிவுட்டில் தொடங்கிய #MeToo என்ற ஹாஷ் டாக் விழிப்புணர்வு பிரச்சாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் அந்தப் பெண்ணை தனது ஆதிக்கத்துக்கு உட்படுத்த முயலும் தயாரிப்பாளர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். ஹார்வி வியன்ஸ்டென் எனும் ஹாலிவுட் தயாரிப்பாளரை எதிர்த்து கிளம்பிய அந்தப் பிரச்சாரம் இந்திய இணையதளத்திலும் வைரலாகியது.

அதனைத் தொடர்ந்து மீடியாவில் அதிகம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய செய்தி என்னவெனில் தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு பாலியல் தொந்திரவு தருகிறார்கள் என்ற செய்திகள். இது அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இலைமறைவாக நடந்து கொண்டிருந்த விஷயம்தான் என்றாலும் தற்போது நடிகைகள் வெளிப்படையாகவே தங்களை தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக கூறி வருகிறார்கள். புகார் அளிக்கிறார்கள். இது குறித்து தனது கருத்தை பாலிவுட்டில் புகழ்ப் பெற்ற தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சமீபத்தில் தனது டிவிட்டரில் பதிவு செய்தார்.

‘சில தயாரிப்பாளர்கள் இப்படி நடந்து கொள்வது உண்மைதான், என்றாலும் சில நடிகைகளும் சான்ஸ் வேண்டும் என்பதற்காக நெருக்கமாக பழகிவிட்டு, அதன் பின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும், உடனே அந்தத் தயாரிப்பாளர் மீது பாலியில் தொல்லை புகார் தருகிறார்கள். இந்தப் பிரச்னைக்கு தயாரிப்பாளர் மட்டுமே காரணம் என்பது முற்றிலும் சரியில்லை’ என்று கூறினார்.

அப்போது நீங்கள் மீடூ மூவ்மெண்டுக்கு எதிரானவரா என்று அவரிடம் கேட்ட போது, அதற்கு அவர், 'நிச்சயம் இல்லை. சில தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்குத் தொந்திரவு கொடுத்து வருவது உண்மைதான். ஆனால் நாணயத்துக்கு இரண்டு பக்கமும் உண்டு என்று தான் சொல்கிறேன். இது போன்ற பிரச்னைகளை எளிதில் தீர்ப்பு சொல்ல முடியாது. யார் ஏமாற்றுகிறார்கள் என்பது அதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. யாரின் குரல் கேட்கப்படுமோ, யார் சக்தி வாய்ந்தவரோ அவரே கவனம் பெறுகிறார்கள். இன்னொரு தரப்பு தோல்விக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறது’ என்று கூறினார் ஏக்தா கபூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com