இதற்காக உங்களுக்குக் காசு வேற கொடுக்கறாங்களா?: ஆர்யாவைக் கிண்டல் செய்யும் நடிகர் சதீஷ்!

பிரதர், அடுத்த சீசனுக்கு உங்கள் பெயரைப் பரிந்துரைத்துள்ளேன். எனவே...
இதற்காக உங்களுக்குக் காசு வேற கொடுக்கறாங்களா?: ஆர்யாவைக் கிண்டல் செய்யும் நடிகர் சதீஷ்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி மூலமாகத் தனக்கான துணையைத் தேர்வு செய்ய களமிறங்கியுள்ளார் நடிகர் ஆர்யா. இந்த நிகழ்ச்சி நேற்று முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் 16 பெண்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்யவுள்ளார்.

ஆர்யாவின் இந்த முயற்சிக்கு அவருடைய நெருங்கிய நண்பர்களும் திரையுலகப் பிரபலங்களும் ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரம் ட்விட்டரில் வெளியானது. இதைப் பார்த்த நகைச்சுவை நடிகர் சதீஷ் கூறியதாவது:

ஆர்யா டார்லிங், சும்மாவே இததான் செஞ்சிட்டு இருந்தீங்க. இப்போ இதுக்கு காசு வேற கொடுக்கறாங்க என்று கிண்டலாக ட்வீட் எழுதினார்.

அதற்குப் பதிலளித்த ஆர்யா, பிரதர், அடுத்த சீசனுக்கு உங்கள் பெயரைப் பரிந்துரைத்துள்ளேன். எனவே அதற்கான பயிற்சியை இப்போதே ஆரம்பியுங்கள் என்றார். உடனே சதீஷும், அடுத்த சீசன் எப்போது ஆரம்பமாகிறது என்று பதில் அளித்து இந்த சுவாரசியமான உரையாடலை நிறைவு செய்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com