போருக்குப் படை தயார் பண்ணுவார்னு பார்த்தா...: ரஜினி புதுப்பட அறிவிப்பைக் கிண்டல் செய்யும் நடிகை கஸ்தூரி!

அட  என்னப்பா! போருக்குப் படை தயார் பண்ணுவார்னு பாத்தா படம் தயார் பண்ண போறாராமே! அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்...
போருக்குப் படை தயார் பண்ணுவார்னு பார்த்தா...: ரஜினி புதுப்பட அறிவிப்பைக் கிண்டல் செய்யும் நடிகை கஸ்தூரி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்தது. காலா, 2.0 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, அரசியல் பரபரப்புகளுக்கிடையே இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி, ரஜினியின் புதுப்பட அறிவிப்பைக் கிண்டல் செய்து ட்வீட் வெளியிட்டுள்ளார்.

அட  என்னப்பா! போருக்குப் படை தயார் பண்ணுவார்னு பாத்தா படம் தயார் பண்ண போறாராமே! அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். #மறுபடி_மொதல்லேர்ந்தா #ஒரு_நிமிஷம்_தலை_சுத்திரிச்சு என்று கிண்டலுடன் ட்வீட் செய்தவர் கூடவே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ரஜினியைச் சந்தித்துப் பேசினார் கஸ்தூரி. தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து பெறுவதற்காக ரஜினியைச் சந்தித்த கஸ்தூரி அவருடைய அரசியல் பிரவேசம் குறித்தும் பேசினார். இதுகுறித்து கஸ்தூரி அப்போது கூறியதாவது: ரஜினியைச் சந்தித்து விவாதித்தேன். அவருடைய அரசியல் பார்வை மற்றும் அரசியல் திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டேன். நம்பிக்கையுடன் உள்ளேன் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com