மீடியா விமரிசகர்களுக்காக ரஜினி சொன்ன குட்டிக் கதை!

தான் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் சில சமயம் சுவாரஸ்யமான குட்டிக கதைகள் சொல்வது
மீடியா விமரிசகர்களுக்காக ரஜினி சொன்ன குட்டிக் கதை!

தான் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் சில சமயம் சுவாரஸ்யமான குட்டிக கதைகள் சொல்வது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு நெருப்புடா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பங்கேற்றார். மீடியா விமரிசனங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி ரஜினி சொன்ன குட்டிக் கதை இது.

ஒரு ராஜா இருந்தானாம்

அந்த ராஜாவுக்கு புள்ளையே பொறக்கல... அவனும் போகாத கோயில் கிடையாது.. பண்ணாத பூஜை கிடையாது. என்னென்னமோ செய்யறான். கேட்காத கடவுளே கிடையாது. ரொம்ப வருஷம் கழிச்சி ஒரு குழந்தை பொறந்தது. ஆண் குழந்தை. ரொம்ப சந்தோஷமாயிட்டான்.

அடுத்து நாட்ல இருந்த அத்தனை ஜோசியக்காரர்கள், ரிஷிகளையெல்லாம் கூப்பிட்டான். பையனுக்க ஜாதகம் பாருங்கன்னு கேக்கறான்.

எல்லாருமே ‘ராஜா உங்களுக்கு இவனாலதான் மரணம்.. இவன்தான் உங்களை சாகடிக்கப் போறான்’னு சொல்றாங்க. உடனே கோபம் வந்த ராஜா ‘எல்லாரையும் உள்ள தூக்கிப் போடுங்கய்யா… பத்து நாள்ள தலைய சீவிடுங்க’ன்னு சொல்லிடறான்.

இன்னொரு ஜோசிக்காரர் வந்தார். பெரிய ஜோசியக்காரர். எல்லாம் அறிந்தவர். அவர்கிட்ட குழந்தையின் ஜாதகத்தைக் காட்டி எதிர்காலம் பத்திக் கேட்டான் ராஜா… 'ஆஹா… இந்த மாதிரி ஒரு ஜாதகத்தை நான் பாத்ததில்லை. இவன் உன்னை விட பெரிய ராஜாவா, நூறு மடங்கு பலமிக்க ராஜாவா வருவான்'னு சொல்றார் ஜோசியக்காரர்.

உடனே ரொம்ப சந்தோஷமான ராஜா, உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க… என்ன வேணும்னாலும் தரேன்னு சொல்றார்.

உடனே, 'இப்ப அடைச்சி வச்சிருக்கிற ஜோசியக்காரங்களை விடுதலை பண்ணு,'ன்னு கேக்கறார்.

அந்த மாதிரி, விமரிசனங்களுக்கு நாம பயன்படுத்தற வார்த்தை முக்கியம். நாசூக்கா சொல்லுங்க. ஒரே விஷயம்தான். ஆனா சொல்ற விதத்துலதான் எல்லாம் இருக்கு.  அதைவிட்டுட்டு நேரடியா, ‘ஏன்டா இந்த மாதிரி படம் எடுத்த, ஏன்டா சாவடிக்கிறனெல்லாம் சொல்லாதீங்க,’ என்றார் தனது ட்ரேட் மார்க் சிரிப்புடன். அவர் சினிமா விமரிசனங்களுக்காகச் சொன்னது, அரசியலுக்கும் பொருந்தும் என்பது உண்மைதானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com