காதல் கணவருடன் இணைந்து நமீதா முதன்முதலில் பார்த்த படம் என்ன?

காதல் கணவருடன் இணைந்து நமீதா முதன்முதலில் பார்த்த படம் என்ன?

தமிழ்த் திரைப்பட நடிகை நமீதாவுக்கும், தயாரிப்பாளர் வீரேந்திர சௌத்திரிக்கும் திருப்பதியில்

தமிழ்த் திரைப்பட நடிகை நமீதாவுக்கும், தயாரிப்பாளர் வீரேந்திர சௌத்திரிக்கும் திருப்பதியில் உள்ள இஸ்கான் கோயிலில் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பின் நமீதா ஊடகங்களில் தென்படவில்லை. சமீபத்தில் இந்தத் தம்பதியர் முதல் முதலில் பார்த்த திரைப்படம் பற்றிய தகவல் வெளியானது. திரையுலகில் க்ளாமருக்காகவே புகழப்பட்ட நமீதா ‘ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டுள்ளார். திருமணத்துக்குப் பிறகு அவர் முதன் முதலில் பார்த்ததும் ஒரு ஆன்மிகம் சார்ந்த ஒரு பக்தி படமாகும். இஸ்கானை (ISKON - அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) உருவாக்கிய அ.ச.பக்தி வேதாந்த சுவாமி பிரபு பாதரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய ஆவணப்படம் சமீபத்தில் திரையிடப்பட்டது. தன் கணவருடன் அப்படத்தை பார்த்து ரசித்துள்ளார் நமீதா.

அ.ச.பக்தி வேதாந்த சுவாமி பிரபு பாதர் 1965-ம் ஆண்டு இவர் தன்னுடைய 70-வது வயதில், கையில் நாற்பது ரூபாயுடன் அமெரிக்காவுக்கு பயணமானார். அங்கு பகவத்கீதை, பாகவதம் போன்ற இந்திய வேத நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை விற்பனை செய்தார். உலக மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் வாழ 'கிருஷ்ண பக்தி’ எனும் விளக்கை ஏற்றினார் பிரபு பாதர்.  பகவத் கீதையை உண்மையுருவில் உலகுக்கு அளித்தவரும் அவரே. 

தனது ஆன்மிக குருவின் கட்டளையை சிரமேற்கொண்டு 'மேலை நாடுகளில் கிருஷ்ணரைப் பற்றி பிரச்சாரம் செய்', என்பதை தாரகமந்திரமாக ஏற்று அதனை நிறைவேற்றுவதற்காக அமெரிக்காவில் 'இஸ்கான்' (ISKON) என்று பின்னாட்களில் அறியப்பட்ட,  அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஸ்தாபித்தார் பிரபுபாதர். 12 ஆண்டுகளில் 108 ஸ்ரீகிருஷ்ண ஆலயங்களை அமைத்து தனது அளப்பரிய பணியாகிய அவரது நூல்களையும் எழுதினார். பிரபு பாதர் கூறியது என்னவெனில் 'நான் எப்பொழுதும் உங்களுடன் எனது புத்தக வடிவில் வாழ்வேன்’ அவ்வகையில் ஹரே ராமா  ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் முக்கியத்துவத்தை எவ்வாறு உலகத்துக்கு உணரச் செய்தார் என்பதுதான் இந்த ஆவணப் படத்தின் கதை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com