விஜய் - முருகதாஸ் படம்: கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தேர்வு!

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்... 
விஜய் - முருகதாஸ் படம்: கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தேர்வு!

விஜய்-யின் அடுத்தப் படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் படத்துக்கு மீண்டும் இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்றவுள்ளார்கள். நடிகர்களில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். 

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு விஜய் - முருகதாஸ் இணையும் மூன்றாவது படமிது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. பைரவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கி, தீபாவளி அன்று படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com