பிறந்த நாளான இன்று தனது திருமண அறிவிப்பை வெளியிடுகிறாரா தீபிகா படுகோன்?

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா அண்மையில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை மணம்
பிறந்த நாளான இன்று தனது திருமண அறிவிப்பை வெளியிடுகிறாரா தீபிகா படுகோன்?

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா அண்மையில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை மணம் செய்து கொண்டார். இந்த திருமணக் கொண்டாட்டம், விருந்து உபசரிப்புக்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில், பாலிவுட்டில் இன்னொரு நட்சத்திர ஜோடிக்கும் திருமணம் நிச்சயக்கப்படவிருக்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அவர்கள் வேறு யாருமல்ல. பத்மாவதி, பாஜி ராவ் மஸ்தானி, ராம் லீலா ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த ரன்வீர் சிங்-தீபிகா படுகோன்தான். கடந்த 2013-ம் ஆண்டு முதல் இந்த ஜோடி காதலித்து வருகிறார்கள் என்று பாலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது. தீபிகா படுகோனின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 5) இந்த ஜோடி தமது திருமணத்தை நிச்சயம் செய்து கொள்ளவிருப்பதாக பாலிவுட் செய்திகள் கூறுகின்றன.

தீபிகா படுகோனின் 32-வது பிறந்தநாளை முன்னிட்டு தொடர் கொண்டாட்டத்திற்காக இலங்கை சென்றுள்ளனர் இந்த ஜோடி. புத்தாண்டை இந்த இருவரின் குடும்பங்களும் மாலத் தீவில் கொண்டாடி மகிழ்ந்தனர். பத்மாவதி பட விவகாரத்தால் மன அழுத்தட்த்ல் இருந்த தீபிகாவை அவரது பிறந்த நாளன்று மகிழ்விக்க எண்ணி, அத்தினத்தை சிறப்பாக கொண்டாட இரு குடும்பத்தாரும் திட்டமிட்டு ஸ்ரீலங்காவிற்குச் சென்றனர்.

அங்கு ஸ்னோர்கெல்லிங் ஆழ்கடல் பிரயாணம் உள்பட பலவிதமான உற்சாக நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் செய்து விதவிதமான அனுபவங்களை அவருக்கு வழங்க முடிவு செய்தனர். இந்நிலையில் இந்தக் குடும்பங்கள் இணைந்து வெளிநாடு சென்றது பாலிவுட் சினிமா பத்திரிகைகளின் செய்திப் பசிக்கு விருந்தளித்தது.

அவர்களின் திருமண நிச்சயத்திற்காகத்தான் இலங்கை சென்றுள்ளனர் என்று செய்தி வெளியிட, அது வைரலாகத் தொடங்கியது. இந்நிலையில் இச்செய்தியை ரன்வீர் தரப்பு மறுத்துள்ளது. ஆனால் அனுஷ்கா ஷர்மா விராட் கோஹ்லி காதல் விவகாரத்திலும் இதேபோன்ற மறுப்புக்களை சந்தித்த மீடியாவினர் அந்த மறுப்பைப் பொருட்படுத்தவில்லை. 

தீபிகா படுகோன் திருமண செய்தி அதிகாரபூர்வமாகவே விரைவில் வெளிவரும், அது பத்மாவதி படம் வெளியான மகிழ்ச்சியான தருணத்தையொட்டி இருக்கும் என்கிறார்கள் தீபிகா குடும்பத்தினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com