தலைவா ரஜினி: மலேசிய பிரதமர் உற்சாகம்!

தலைவா ரஜினியை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மலேசியாவில் உங்கள் நேரத்தைச் சிறப்பாகச் செலவிடுங்கள்...
தலைவா ரஜினி: மலேசிய பிரதமர் உற்சாகம்!

மலேசியப் பிரதமர் நஜீப் ரஜாக்கை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் ரஜினி. இந்தச் சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தது. அப்போது, ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகிறது. 

நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட 100-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள். இதற்காக தமிழ்த் திரையுலகின் அத்தனை முன்னணி நடிகர் நடிகைகளும் மலேசியாவுக்குச் சென்றுள்ளார்கள். விஜய். அஜித் ஆகிய இருவர் மட்டும் மலேசியா செல்லவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் மலேசியப் பிரதமர் நஜீப் ரஜாக்கை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியுள்ளார் ரஜினி.

ரஜினியுடனான சந்திப்பு குறித்து மலேசியப் பிரதமர் ட்விட்டர் பக்கத்தில், தலைவா ரஜினியை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மலேசியாவில் உங்கள் நேரத்தைச் சிறப்பாகச் செலவிடுங்கள் என்று வாழ்த்தியுள்ளார். 

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆறு நாள் பயணமாக இந்தியா வந்த நஜீப் ரஜாக், தனது பயணத்தை சென்னையில் இருந்து தொடங்கினார். ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். ஒரு சாதாரண ரசிகரைப் போல் ரஜினியுடன் இணைந்து கைப்படங்களை (செல்ஃபி) எடுத்துக் கொண்டார். அதன் பின் நஜீப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்ப் படங்களின் பெரிய ரசிகன் நான். நான் சென்னைக்கு சென்றுள்ளேன். கபாலி படத்தின் இரண்டாவது பாகம் மலேசியாவில் எடுக்கப்படுவதைக் காண காத்திருக்கிறேன் என்றார். அந்தச் சந்திப்பின்போது தனது வீட்டுக்கு வருமாறு அவர் ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து நஜீப் இல்லத்துக்குச் சென்றுவந்துள்ளார் ரஜினி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com