பத்மாவத் படத் தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

பத்மாவத் படத் தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

பத்மாவத் படத்தை குஜராத், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் தடை செய்ததற்கு எதிராகப் படத் தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

பத்மாவத் படத்தை குஜராத், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் தடை செய்ததற்கு எதிராகப் படத் தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பத்மாவத் திரைப்படத்துக்கு முன்பு பத்மாவதி என பெயரிடப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் ராஜபுத்திர ராணி பத்மாவதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, படத்தின் பெயரை பத்மாவத் என மாற்றும்படி மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் நிபந்தனை விதித்தது. இதை திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, அந்தத் திரைப்படத்தை திரையிட மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதியளித்தது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று அந்தப் படத்தை தயாரித்துள்ள வியாகாம் 18 மோஷன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், குஜராத், ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்களில் பத்மாவத் திரைப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளன. 

சண்டீகரில் ஹரியாணா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், 'ஹரியாணாவில் பத்மாவத் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றார். முன்னதாக, அமைச்சர் அனில் விஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது, பத்மாவத் திரைப்படத்தை ஹரியாணாவில் திரையிட அனுமதிக்க மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறியபோது, ராணி பத்மாவதி இந்தியப் பெண்களின் அடையாளமாக திகழ்கிறார், அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதை ஒருபோதும் சகித்து கொள்ளப்பட மாட்டாது எனவும் அனில் விஜ் கூறியிருந்தார்.

குஜராத்தில் சர்ச்சைக்குரிய பத்மாவத் திரைப்படத்தை திரையிடுவதற்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. குஜராத் மாநில உள்துறை இணையமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 'குஜராத் மாநில அதிகார எல்லை வரையறைக்கு உள்பட்ட பகுதியில், பத்மாவத் திரைப்படத்தை திரையிடுவது, விநியோகம் செய்வது போன்ற அனைத்தும் தடை செய்யப்படுகிறது; மக்கள் நலன் கருதியிலும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்தத் தடையை மாநில அரசு விதித்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குஜராத், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் பத்மாவத் படத்தைத் தடை செய்ததற்கு எதிராகப் படத் தயாரிப்பாளர்கள் அஜித் அந்தாரே, சஞ்சய் லீலா பன்சாலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். மாநிலங்கள் விதித்துள்ள தடையை நீக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com