கோடைமழை படத் தயாரிப்பாளரை ஏமாற்றினேனா?: தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் விளக்கம்

கோடைமழை படத்தை மறுவெளியீடு செய்தது தொடர்பான புகார்களுக்கு தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்...
கோடைமழை படத் தயாரிப்பாளரை ஏமாற்றினேனா?: தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் விளக்கம்

கோடைமழை படத்தை மறுவெளியீடு செய்தது தொடர்பான புகார்களுக்கு தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கோடைமழை படத்தை மறுவெளியீடு செய்ததில் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் ஏமாற்றிவிட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அலெக்சாண்டர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு அளித்துள்ள மனுவில் கூறியதாவது: கோடைமழை படத்தை 27 திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டோம். படத்துக்கு நல்ல விமரிசனங்கள் வந்தும் படத்தைத் திரையரங்கிலிருந்து எடுத்துவிட்டார்கள். இப்படத்தை மறுவெளியீடு செய்ய உதவுவதாகத் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் கூறினார். 90 திரையரங்குகளில் வெளியிடுகிறேன். அதற்கு 40 லட்சம் செலவாகும் என்றார். அதை நம்பி நாங்கள் ரூ. 25 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்தோம். ஆனால் 11 திரையரங்குகளில் மட்டுமே படம் வெளிவந்தது. செலவு போக மீதம் 11 லட்சத்துக்குக் காசோலை கொடுத்தார். அதுவும் திரும்பிவந்துவிட்டது. எனவே அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து தன் மீதான குற்றச்சாட்டுக்குத் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: 

கோடைமழை என்ற படத்தை கதிரவன் இயக்கியிருந்தார். முதலில் வெளியானபோது கவனிக்கப்படவில்லை. மறுபடியும் வெளியிட வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள். மிகவும் கெஞ்சிக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் எதிர்பார்த்த மாதிரி பெரிய காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. நாங்கள் முயன்று தியேட்டர்கள் பிடித்து வெளியிட உதவினோம்.

படம் சுமாராக இருந்ததால் வசூலும் பெரிதாக இல்லை. இது சம்பந்தமான கணக்குகளைக் காட்டி ஐந்து லட்ச ரூபாய் பணமும் கொடுத்தோம். ஆனால் எதுவுமே கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட கணக்குகள் அப்படியே உள்ளன. அவர்கள்தான் வாங்கிக் கொள்ளவில்லை.  அதற்கு நானா பொறுப்பு? எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் பேசி பிரச்னையைத் தீர்த்துக்கொண்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு ஒரு தயாரிப்பாளர் பற்றி பொதுவில் ஊடகங்களுக்குச் செய்தி வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கத்தின் நடைமுறைச் சட்டத்திட்டங்களுக்கு எதிரான செயல். அது மட்டுமல்ல இது என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகும். இது தொடருமானால் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com