சீனாவிலும் வசூல் மன்னனாகி அமீர் கான் சாதனைகளை முறியடிப்பாரா சல்மான் கான்?

அமீர் கான் படங்களுக்கு சீனாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பை அடுத்து சல்மான் கானின் படங்களும் சீனாவில் வெளியாகவுள்ளன...
சீனாவிலும் வசூல் மன்னனாகி அமீர் கான் சாதனைகளை முறியடிப்பாரா சல்மான் கான்?

அமீர் கான் படங்களுக்கு சீனாவில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பை அடுத்து சல்மான் கானின் படங்களும் சீனாவில் வெளியாகவுள்ளன.

அதன் முதல் முயற்சியாக சல்மான் கானின் சூப்பர் ஹிட் படமான பஜ்ரங்கி பைஜான், வரும் மார்ச் 2 அன்று சீனாவில் வெளியாகவுள்ளது. சீன மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்தப் படம் 8000 திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2015-ல் வெளியான பஜ்ரங்கி பைஜான், இந்தியாவில் மட்டும் ரூ. 320 கோடி வசூலித்தது. இந்நிலையில் சீனாவில் இந்தியப் படங்களுக்குக் கிடைக்கும் அதிக வரவேற்பால், பஜ்ரங்கி பைஜான் சீனாவில் பல மடங்கு வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய நடிகர்களில் அதிக வசூலைக் கண்ட நடிகர் என்கிற பெருமை சல்மான் கானுக்கு உண்டு. இவருடைய 12 படங்கள் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலை அடைந்துள்ளன. அதேபோல இந்தியாவில் ரூ. 300 கோடி வசூலித்த 6 படங்களில் மூன்று, சல்மான் நடித்தவை.

இந்திய அளவில் வசூல் மன்னனாக இருந்தாலும் சீனாவில் இன்றைய தேதிக்கு அமீர் கான் தான் நெ.1 இந்திய நடிகர். அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதை விடவும் 12 மடங்கு வசூலித்தது டங்கல். ரூ. 1234 கோடி வசூலித்து ($193 மில்லியன்) அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்தியாவிலேயே இந்த வசூலை அடையாத டங்கல் படம் சீனாவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது.

கடந்த வாரம் வெளியான மற்றொரு அமீர் கான் படமான சீக்ரெட் சூப்பர்ஸ்டார், முதல் மூன்று நாள்களில் ரூ. 174 கோடி வசூலித்து அமீர் கானின் வெற்றிப் பயணத்தைத் தொடரச் செய்துள்ளது. இதற்கிடையில் தனது படத்தை சீனாவில் வெளியிடச் செய்து அங்கும் பலத்த போட்டியை உருவாக்கியுள்ளார் சல்மான் கான்.

இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் சல்மான் கான், சீனாவில் அமீர் கானை முந்துவாரா? மார்ச் மாதம் விடை தெரிந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com