ரூ. 420 கோடியைத் தாண்டிய வசூல்: சீனாவில் வெற்றிநடை போடும் சீக்ரெட் சூப்பர்ஸ்டார்!

 பத்தாவது நாளில் இதன் வசூல் ரூ. 400 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வாரம் ரூ. 500 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது...
ரூ. 420 கோடியைத் தாண்டிய வசூல்: சீனாவில் வெற்றிநடை போடும் சீக்ரெட் சூப்பர்ஸ்டார்!

சீனாவில் அமீர் கானின் மற்றொரு படம் ரூ.500 கோடி வசூலை அடையவுள்ளது. 

அமீர் கான் நடித்து தயாரித்த சீக்ரெட் சூப்பர்ஸ்டார் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவிலும் இந்தியர்கள் வாழும் இதர நாடுகளிலும் வெளியானது. அத்வைத் சந்திரன் இயக்கத்தில் ஜைரா வாசிம், அமீர் கான் நடித்த இந்தப் படம் தற்போது சீனாவில் வெளியாகி பல சாதனைகளைப் படைக்கும் முனைப்பில் உள்ளது. உலகிலேயே அதிக திரையரங்குகள் கொண்ட சீனாவில் (41,000 திரையரங்குகளுக்கும் அதிகமாக) தற்போது அமீர் கானின் இந்தப் படம் தான் வசூலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 19-ம் தேதி சீனாவில் வெளியான சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படம், இதுவரை $  $ 66.19 மில்லியன் வசூலித்துள்ளது. அதாவது பத்து நாள்களில் ரூ. 421 கோடி வசூல்! முதல் நாளன்று ரூ. 44 கோடி வசூலித்த ($ 6.89 மில்லியன்) இந்தப் படம் முதல் நான்கு நாள்களில் ரூ. 200 கோடி வசூலை எட்டியது. இந்நிலையில் 10-வது நாளில் இதன் வசூல் ரூ. 400 கோடியைத் தாண்டியுள்ளது. இதனால் இந்த வாரம் இதன் வசூல் ரூ. 500 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் சீனாவில் வெளியான அமீர் கான் நடித்த டங்கல் படம் ரூ. 1234 கோடி வசூலித்து ($193 மில்லியன்) அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்தியாவிலேயே இந்த வசூலை அடையாத டங்கல் படம் சீனாவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது (அதன் முதல் வார வசூல் - ரூ. 187 கோடி). இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதை விடவும் 12 மடங்கு வசூலித்தது டங்கல். இந்நிலையில் சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படமும் அமீர் கானுக்கு சீனாவில் பெருமை சேர்த்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com