ஐஐஎம் மாணவர்களைச் சிரிக்க வைத்த ராஜமெளலியின் ‘பாகுபலி’ பட்ஜெட் ஜோக்!

‘நமது மொத்தப் பணத்தையும் இந்தத் திரைப்படங்களில் மட்டுமே முதலீடு செய்து விட்டால் நமது குழந்தைகளின் எதிர்காலக் கல்விச் செலவிற்கு கூட பிறகு ஒன்றும் தேறாது?
ஐஐஎம் மாணவர்களைச் சிரிக்க வைத்த ராஜமெளலியின் ‘பாகுபலி’ பட்ஜெட் ஜோக்!

பாகுபலி1& 2 திரைப்படங்களின் பட்ஜெட் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய். இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்டப் படங்களையெல்லாம் பட்ஜெட்டில் விஞ்சி நின்றது பாகுபலி. அந்த முதல் பாகத்தை எடுக்கத் தீர்மானித்த போது படப்பிடிப்புக் குழுவினரின் மொத்த பட்ஜெட் 100 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இயக்குனர் எச் எஸ் ராஜமெளலி தனது படத்தை செதுக்கிச் செதுக்கி ஒரு தேர்ந்த சிற்பி போல நுணுக்கமான தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த, பயன்படுத்த பட்ஜெட் எகிறிக் கொண்டே சென்று கடைசியில் பாகுபலி இரண்டு பாகங்களையும் எடுத்து முடிக்கையில் பட்ஜெட் 500 கோடியில் வந்து நின்றது. இதைப் பற்றி குஜராத ஐஐஎம் மாணவர்களிடையே இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலியும்,  தயாரிப்பாளர் சோபு யர்லகடாவும் தங்களது பாகுபலி அனுபவங்கள் குறித்து உரையாடிய போது மாணவர்கள் தரப்பிலிருந்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது;

பாகுபலி மாதிரியான பிரம்மாண்டப் படத்தை மிக அதிகப் பொருட்செலவில் தயாரிக்கையில் பொருளாதார ரீதியாக உங்களுக்கு ஏற்பட்ட தடங்கல்கள் மற்றும் இன்னல்கள் குறித்து கூறுங்கள் என மாணவர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கு இயக்குனர் பதிலளிக்கையில்;

பாகுபலி திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கையில் நான் தயாரிப்பாளர் சோபுவிடம் அடிக்கடி ஜோக் அடிப்பதுண்டு ‘நமது மொத்தப் பணத்தையும் இந்தத் திரைப்படங்களில் மட்டுமே முதலீடு செய்து விட்டால் நமது குழந்தைகளின் எதிர்காலக் கல்விச் செலவிற்கு கூட பிறகு ஒன்றும் தேறாது? குறைந்த பட்சம் அவர்களது எதிர்காலக் கல்விச் செலவுக்காவது கொஞ்சம் பணத்தை விட்டு வைக்க வேண்டுமே?! படம் வெற்றி பெற்றால் தப்பித்தோம்... இல்லாவிட்டால் இது மிகப்பெரிய சூதாட்டம் மாதிரி ஆகி விடும்? என்று;

அந்த அளவுக்கு பாகுபலியின் பொருளாதாரச் சுமை எங்களை அப்போது அச்சுறுத்திக் கொண்டிருந்தது உண்மை. என்னையும், தயாரிப்பாளரையும் மட்டுமல்ல, பாகுபலிக்காக பணியாற்றிய அனைவருக்குள்ளும் படத்தின் பிரமாண்ட பட்ஜெட் குறித்த அச்சம் இருந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் பட வெளியீட்டுக்குப் பின் அதன் பிரமாண்ட வெற்றி எங்களை சந்தோசத்தில் ஆழ்த்தி விட்டது மட்டுமல்ல நிம்மதியடையவும் வைத்து விட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com