இந்தியன் 2-வில் கமல்ஹாசனுடன் நடிக்கவிருக்கிறாரா நயன்தாரா?

இந்தியன் 2-வில் கமல்ஹாசனுடன் நடிக்கவிருக்கிறாரா நயன்தாரா?

இந்தியன் 2 பட அறிவிப்பினை சமீபத்தில் பலூனில் பறக்க விட்டார் இயக்குநர் ஷங்கர்.

இந்தியன் முதல் பாகம் 1996-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் ஷங்கர் தயாராகிவருகிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

2.0 இறுதி கட்டப் பணிகள் முடிந்தபின், இந்தியன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும். வடிவேலு இதில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தின் கதாநாயகி உள்ளிட்ட பிற பாத்திரங்களுக்கான தேடல் நடைபெற்று வருகின்ற நிலையில், அண்மையில் நயன்தாராவிடம் நடிக்கக் கேட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.  அனிருத் இசை அமைக்கவிருக்கிறார். ஆனால் இப்படம் குறித்த தகவல்கள் எதுவும் அதிகாரபூர்வமான வெளிவரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com