கோலிவுட்டில் ரீல் ஹீரோக்களுக்கு எல்லாம் ரியல் ஹீரோ இவர் தான்!

ஸ்டண்ட் சிவா... தமிழ் சினிமாவின் முக்கியமான சண்டை பயிற்சி இயக்குநர். "சேது',
கோலிவுட்டில் ரீல் ஹீரோக்களுக்கு எல்லாம் ரியல் ஹீரோ இவர் தான்!

ஸ்டண்ட் சிவா... தமிழ் சினிமாவின் முக்கியமான சண்டை பயிற்சி இயக்குநர். "சேது', "நந்தா', "பிதாமகன்', "வேட்டையாடு விளையாடு' என படத்துக்குப் படம் ஆச்சரியம் அளிக்கும் ஸ்டண்ட் இவருடையது. "இமைக்கா நொடிகள்', "அடங்க மறு', "கும்கி 2' என இப்போதும் வெவ்வேறு தளம் கொண்ட படங்களுக்கு ஏற்ப வித்தை வியூகம் வகுப்பவர்.

டூரிஸ்ட்டுக்கும், டிராவலருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. டூரிஸ்ட்டாக இருந்தால் எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்க போகிறோம் இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானித்துக் கொண்டு போவான். ஆனால், பயணி அப்படி இல்லை. அவன் கையில் திட்டம் இருக்காது. ஃபார்முலா இருக்காது. அவனுக்கு பயணிக்க வேண்டும். ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அசையாமல் கட்டிப் போட்டாலும் நம் மனசு எங்கேயாவது பயணித்துக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு பயணம்தான் எனக்கு. அப்படித்தான் நான் நடிக்க வந்ததும். நான் எங்கே இருக்கிறேனோ அதுதான் என் அப்போதைய விலாசம்.போதனை செய்கிற அளவுக்கு நான் சாதிக்கவில்லை. ஆனால், முயற்சிகளில் தளர்வு அடைவது வேண்டாத வேலை. கொஞ்ச வருஷம் உழைத்துவிட்டு ஒன்றும் கிடைக்கவில்லைன்று சொல்லி விட்டு திரும்பிவிடக் கூடாது. உங்களுக்கான மகுடம் அடுத்த திருப்பத்திலும் 
காத்திருக்கலாம்.'' 

100 படங்களுக்கு மேலான ஒரு பயணம்.... தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய சினிமாக்களில் அதிரடி முத்திரை... எப்படி இருக்கிறது பயணம்....?

நான் ஒரு சாதாரண ஆள். கோடம்பாக்கம்தான் எனக்கு எல்லாம். என் மாமா நடராஜன் அப்போதைய சினிமாவில் பரபரப்பான ஸ்டண்ட் மேன். ரஜினி, கமல் படங்களுக்கெல்லாம் அவர்தான் டூப். அவர்தான் நமக்கு இந்த துறைக்கு வர ஊக்கம் தந்தவர். சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து உள்ளே வந்தேன். மாமா ஸ்டண்ட்டில் இருந்ததால், அதற்குள் வருவது சுலபமாக இருந்தது. "லவ் டுடே' நான் முதன் முதலாக சண்டை பயிற்சி இயக்குநராக உள்ளே வந்த படம். அதைத் தொடர்ந்து ஏராளமான படங்கள். ஒவ்வொரு படத்துக்கும் அவ்வளவு உழைப்பு. அவ்வளவு தனித்துவம் கொடுத்தேன். இப்போது நீங்கள் எல்லாம் நின்று பேசுகிற அளவுக்கு வந்திருக்கிறேன். இதுதான் நான் வளர்ந்து வந்த கதை. எனக்கென எந்த திட்டமும் இல்லை. குறிப்பாக பயம் கிடையாது. எந்த இமேஜூக்குள்ளும் சிக்குவது கிடையாது. இப்போது அப்படித்தான் நடிப்பதற்கும் ஆசை வந்திருக்கிறது. எல்லோரும் பாராட்டுகிற அளவுக்கு நடிப்பில் மிளிர வேண்டும். சண்டை பயிற்சியும், நடிப்பும் என இரண்டு கண்கள் மாதிரி. இதுவரைக்கும் தவறான படங்களில் நடித்ததில்லை. நடிப்பது எனக்கு பிடிக்கும் அதனால் நடிக்கிறேன் என இந்த பேட்டி மூலமாக அவர்களுக்கு பதில் சொல்லிக் கொள்கிறேன். 

தமிழ் சினிமா பெரிய அளவில் மாறியிருப்பதை கவனிக்கிறீர்களா...? "ஜோக்கர்', "அறம்', "அருவி' மாதிரியான படங்கள் பெரிய ஹீரோக்கள், சண்டை காட்சிகள் இல்லாமல் வெற்றியடைந்துள்ளதே...?

இது எல்லா சினிமாக்களிலும் உண்டு. ஹாலிவுட்டில் எடுத்துக் கொண்டால், ஈரானிய சினிமாவிலும் கூட இது உண்டு. பொதுவாக, சினிமாவில் ஹிட் ஆனவர்கள் ஒரே தளத்தில் பயணிப்பார்கள். மாற்றுச் சிந்தனையை அமுக்கி விடுவார்கள். ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின் ஒருமுறையாவது புதிய சிந்தனைகள் அடித்துக் கொண்டு மேலே வரும். இதை ஏதோ பெரிய படம் தோல்வி, சின்னப் படம் வெற்றி என்று நான் பார்க்கவில்லை. இது புதிய சிந்தனைகளின் வெற்றி. மக்களோட ரசனையைப் புரிந்து, காலத்துக்கு ஏற்ற மாதிரி சினிமா மாற வேண்டும். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இதை எதிர்க்கும் விஷயம், தடுக்கும் விஷயமும் தடைபடும். அதையும் தாண்டி இளைஞர்கள் வர வேண்டும். நல்ல சிந்தனைகளும் வர வேண்டும். "சேது', "நந்தா', "பிதாமகன்' படங்கள் எல்லாம் அதற்கு உதாரணம். கதைக்களங்களுக்கு ஏற்ற சண்டை காட்சிகள் அமைக்கவில்லை என்றால், அங்கே எனக்கு வேலை இல்லை. அதனால் அதில் என் பங்கும் இருக்க ஆசைப்படுகிறேன். 

சண்டை கலைஞர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது....?

கைத்தட்டலின் ருசிதான் இங்கே. அதற்காகத்தான் எல்லோரும் காத்துக் கிடக்கிறோம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஊர், ஊராக போய் விதவிதமான கைத்தட்டல்களைக் கேட்க ஆரம்பித்தேன். "கொஞ்சம் கூட பயமே இல்லாமல், இப்படி இருக்கானே இந்த சின்ன பையன்' என பாராட்டினார்கள். மறுபடியும் மறுபடியும் கைத்தட்டல். அந்த ருசிதான் இதுவரை கடத்தி வந்திருக்கிறது. இப்படித்தான் என்னை போல் ஆயிரமாயிரம் பேர். கைத்தட்டலுக்காக காத்திருக்கிறார்கள். இங்கே பாதுகாப்பு என்பது முக்கியம்தான். ஆனால், நாம் தேர்வு செய்த இடம் இப்படி. என்ன செய்வது. அரசும், சங்கமும் மனசு வைத்தால், எதாவது செய்யலாம். வேறு என்ன செய்ய? உடம்புதான் இங்கே மூலதனம். அது போனால், வாழ்க்கை போய் விடும். அப்படிப்பட்ட பயங்கரமான வாழ்க்கை இது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com