தெலுங்கு பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் நள்ளிரவில் கைது!

தற்போது பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் கஸ்டடியில் இருக்கும் கத்தி மகேஷ் மீது ஐபிசி செக்‌ஷன்கள் 295 மற்றும் 5005 ன் பேரில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் நள்ளிரவில் கைது!

கடந்தாண்டு ஸ்டார் மா தொலைக்காட்சியில் வெளியான தெலுங்கு பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவராக கத்தி மகேஷ் என்பவர் கலந்துகொண்டிருந்தார். கத்தி மகேஷ் ஒரு சினிமா விமர்சகர் மற்றும் பத்திரிகையாளர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரிதாக பிரபலமற்றிருந்த கத்தி மகேஷ் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளராகத் தேர்வான பின் பரவலாக மக்களால் அறியப்பட்ட நபர்களில் ஒருவரானார்.

பிக்பாஸ் சீசன் 1 ல் பார்வையாளர்கள் அளிக்கும் ஓட்டுக்களின் அடிப்படையில் அவர் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் இன்று ஆந்திராவின் அறியப்பட்ட முகங்களில் ஒருவராக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் பிக்பாஸ்.

சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்புக் கிளப்பிய ஸ்ரீலீக்ஸ் விவகாரத்தின் போது தெலுங்கு திரைப்பட உலகம் மற்றும் ஊடகங்களில் மிகுந்த வரும் ’காஸ்டிங் கெளச்’ கறைபட்ட நபர்களில் ஒருவராக கத்தி மகேஷும் சில தொலைக்காட்சி நேரலை நிகழ்வுகளில் பங்கேற்றார். துணை நடிகை ஒருவர் கத்தி மகேஷ் தன்னிடம் அத்துமீறியதாக குற்றம்சாட்டியிருந்தார். கத்தி மகேஷ் அதை மறுத்த போதும் அது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டதாகத் தகவல்.

பாலியல் அத்துமீறல் மட்டுமல்ல தொடர்ந்து ஆந்திர மக்களிடையே செல்வாக்கான கடவுளாகத் திகழும் ஸ்ரீராமனை தவறாகச் சித்தரிக்கும் விதமான கட்டுரைகளை கத்தி மகேஷ் எழுதி வருவதாலும் ராமன் குறித்த தூய்மை பிம்பத்தை உடைக்கும் விதமாக அவரது எழுத்துகள் இருப்பதாகவும், சமூகத்தில் திட்டமிட்டுக் குழப்பம் உண்டாக்கும் தரகர்களில் ஒருவர் போன்று கத்தி மகேஷின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஸ்ரீபீடம் ஸ்வாமி பரிபூரானந்தா சார்பில் அவர் மீது மேலுமொரு வழக்கு போடப்பட்டது. மேற்கண்ட வழக்குகளின் அடிப்படையில் தற்போது கத்தி மகேஷ் நேற்று நள்ளிரவில் அவரதுவீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் கஸ்டடியில் இருக்கும் கத்தி மகேஷ் மீது ஐபிசி செக்‌ஷன்கள் 295 மற்றும் 5005 ன் பேரில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com