அஜித் மகளாக மீண்டும் நடிக்கிறார் அனிகா!

​அஜித் - சிவா மீண்டும் இணையும் படம் - விசுவாசம். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ்
அஜித் மகளாக மீண்டும் நடிக்கிறார் அனிகா!

​அஜித் - சிவா மீண்டும் இணையும் படம் - விசுவாசம். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி. 

இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து ஒரு படவிழாவில் இயக்குநர் சிவா கூறியதாவது: விசுவாசம் படப்பிடிப்பு 40 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வருகிறார்.

சிவா இயக்கிய வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விசுவாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித்.

தற்போது அனிகா, அஜித்துடன் 'விஸ்வாசம்' படத்தில் அவருக்கு மகளாக நடிக்கிறார் என்றனர் படக்குழுவினர். கடந்த 2015-ம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து 'நானும் ரெளடி தான்' மற்றும் 'மிருதன்' ஆகிய படங்களில் நடித்தார். அண்மையில் கெளதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பில் வெளியான 'மா’ எனும் குறும்படத்தில் நடித்து பரவலாக கவனம் பெற்றார். இந்நிலையில், தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விசுவாசம்' படத்தில் அஜித்துடன் மீண்டும் நடிக்கிறார் அனிகா என்று தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com