ஹாரிஸ் ஜெயராஜின் வெற்றியை தேவி ஸ்ரீ பிரசாத் தாண்டுவாரா? திங்கள் அன்று சாமி 2 பாடல்கள் வெளியீடு!

2003-ல் வெளிவந்த சாமி பாடல்கள், அப்படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின. படம் வெளிவருவதற்கு முன்பே...
ஹாரிஸ் ஜெயராஜின் வெற்றியை தேவி ஸ்ரீ பிரசாத் தாண்டுவாரா? திங்கள் அன்று சாமி 2 பாடல்கள் வெளியீடு!

கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து சாமி 2 (சாமி ஸ்கொயர்) படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி போன்றோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத். 

இந்நிலையில் சாமி 2 படப் பாடல்கள் ஜூலை 23 அன்று வெளியாகவுள்ளன. ஆகஸ்ட் 31 அன்று படம் வெளிவரத் திட்டமிடப்பட்டுள்ளது. 

2003-ல் வெளிவந்த சாமி பாடல்கள், அப்படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின. படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்ததால் படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சாமி 2 படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாமி படம் போன்ற இனிமையான, மக்களைக் கவரும் பாடல்களை டிஎஸ்பி தருவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com