நான் சீரியலுக்கே முன்னுரிமை தருவேன்: சொன்ன நடிகை யார்?

திரைப்படங்களில் அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் இப்படியே அமைய... பொறுத்துப் பார்த்தவர் தூர்தர்ஷனின் ‘ஓம் நமச்சிவாயா’ தொடரில் பார்வதியாக நடிக்க நல்ல வாய்ப்பொன்று கிடைக்க.
நான் சீரியலுக்கே முன்னுரிமை தருவேன்: சொன்ன நடிகை யார்?

தமிழ் சீரியல் உலகில் நடிகை காயத்ரியைத் தெரியாதவர் இருக்க முடியாது. காயத்ரி பெங்களூரைச் சேர்ந்தவர். தற்போது திருமணத்திற்குப் பிறகு கணவர், குழந்தைகளுடன் மும்பையில் வசிக்கிறார். காயத்ரியின் திரை வாழ்வை தூசி தட்டினால் சில ஆச்சர்யங்கள் கிடைக்கக் கூடும். காயத்ரி தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம் ரேவதியின் ‘பாசமலர்கள்’ அதில் அரவிந்த் சுவாமி ஹீரோ. அவர் 5 ஆதரவற்ற குழந்தைகளை ஒரு காப்பகத்தில் இருந்து தத்தெடுத்து வளர்ப்பதாகக் கதை செல்லும். அந்த 5 குழந்தைகளில் ஒருவராகத் தான் தமிழ் சினிமாவில் காயத்ரியின் அறிமுகம் நிகழ்ந்தது. அதன் பின்னர் காயத்ரி விஜய், அஜித் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையில்’ திரைப்படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்திருந்தார். கதைப்படி அஜித் தற்கொலை செய்து கொள்ள அதற்கு காரணமாகும் முன்னாள் காதலியாக நடித்திருந்தார் காயத்ரி.

திரைப்படங்களில் அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் இப்படியே அமைய... பொறுத்துப் பார்த்தவர் தூர்தர்ஷனின் ‘ஓம் நமச்சிவாயா’ தொடரில் பார்வதியாக நடிக்க நல்ல வாய்ப்பொன்று கிடைக்க. தொடர்ந்து 5 ஆண்டுகள் அதில் செட்டிலானார். அந்தத் தொடர் வாயிலாக அவருக்கு டிவி ரசிகர்களிடையே நல்ல அறிமுகம் கிடைத்ததோடு ஏகோபித்த வரவேற்பும் கிடைத்தது. ஓம் நமச்சிவாயாவைத் தொடர்ந்து கிடைத்த ‘மெட்டி ஒலி’ வாய்ப்பும் காயத்ரிக்கு சீரியல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதனடிப்படையில் தனது திரை வாழ்க்கை எத்திசையில் செல்ல வேண்டும் என்பதை முடிவெடுத்ததாகக் கூறும் காயத்ரி, தனது நேர்காணலொன்றில், ஒரே நேரத்தில் ஒரு திரைப்பட வாய்ப்பும், சீரியல் வாய்ப்பும் கிடைக்கும் போது தன்னுடைய முன்னுரிமை என்பது எப்போதும் சீரியல் வாய்ப்புக்கே இருக்கும் என்கிறார். காரணம், சீரியலில் தனக்குக் கிடைக்கக்கூடிய சுதந்திரமும், வசதியும் திரைப்படங்களில் கிடைக்க முடியாது என்பதாலும் தான் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com