சூர்யாவுக்குப் பிறந்தநாள் பரிசளித்த கே.வி. ஆனந்த்! ரசிகர்கள் ஆச்சர்யம்!

சூர்யா நடித்து வரும் என்ஜிகே படத்தின் போஸ்டர்கள் தற்போதுதான் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன...
சூர்யாவுக்குப் பிறந்தநாள் பரிசளித்த கே.வி. ஆனந்த்! ரசிகர்கள் ஆச்சர்யம்!

சூர்யா நடித்து வரும் என்ஜிகே படத்தின் போஸ்டர்கள் தற்போதுதான் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் தொடங்கியுள்ள சூர்யா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தின் புகைப்படம் ஒன்று, சூர்யாவின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பு எதுவும் இல்லாமல் தடாலடியாகப் புதிய படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியானதில் சூர்யா ரசிகர்கள் ஆச்சர்யமடைந்து கே.வி. ஆனந்துக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

எனினும் இந்தப் புகைப்படம், புதிய படத்துக்கு உரியதா அல்லது முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமா என்றும் சிலர் கேள்வியெழுப்பியுள்ளார்கள். கே.வி. ஆனந்த் தரப்பில் இதுகுறித்து வேறு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கில் இந்த போஸ்டர் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளதால் இது புதிய படத்தின் போஸ்டராகவே அறியப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்தின் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மோகன் லாலும் நடிக்கிறார். மோகன்லால், கடைசியாக 2014-ல் ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு இப்போதுதான் தமிழ் படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் ஜோடி - சாயிஷா. ஆர்யா, சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகரான போமன் இராணி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com