சின்னத்திரை, வெள்ளித்திரை பாகுபாடு பார்ப்பதில்லை: பிரபல நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்

ஹோம்கம்மிங், அமேஸான் பிரைம் விடியோ செயலியில் நவம்பர் 2 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதன் டீசர் தற்போது வெளியிட்டுள்ளது...
சின்னத்திரை, வெள்ளித்திரை பாகுபாடு பார்ப்பதில்லை: பிரபல நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்

பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ், ஹோம்கம்மிங் என்கிற அமேஸான் பிரைம் தொடரில் நடித்து வருகிறார். 2014-ல் தி நார்மல் ஹார்ட்-டில் நடித்தபிறகு அவர் மீண்டும் சின்னத்திரைக்குத் திரும்பியுள்ளார்.

இதுபற்றி 50 வயது ஜூலியா ராபர்ட்ஸ் கூறியதாவது: 

சின்னத்திரையில் நடிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்ததால் ஹோம்கம்மிங் தொடரை ஏற்றுக்கொள்ளவில்லை. சின்னத்திரை, வெள்ளித்திரை என்கிற பாகுபாடு பார்ப்பதில்லை. என் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி பெரிதாகவே இருக்கும்!

இரு ஊடகங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எண்ணவில்லை. வீட்டின் வரவேற்பறைக்குள் செல்வதை விரும்புகிறேன். உங்கள் வீடுகளுக்குப் பொழுதுபோக்கை நாங்கள் கொண்டுவருகிறோம் என்றார்.

ஹோம்கம்மிங், அமேஸான் பிரைம் செயலியில் நவம்பர் 2 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. சாம் இஸ்மாயில் இத்தொடரை இயக்கிவருகிறார். இதன் டீசரை அமேஸான் பிரைம் விடியோ வெளியிட்டுள்ளது. 

வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படம் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தருகிறது அமேஸான் பிரைம் விடியோ செயலி. இதற்கென தனிக்கட்டணங்கள் உண்டு. டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி போன்றவற்றில் அமேஸான் பிரைம் செயலியில் வெளியாகும் விடியோக்களைப் பார்க்கமுடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com