இதுவரையிலான உனது சிறந்த படம் இது: பா.இரஞ்சித்துக்கு அவரது குரு பாராட்டு 

இதுவரையிலான உனது சிறந்த படம் இது என்று பா.இரஞ்சித்துக்கு அவரது குரு  வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுவரையிலான உனது சிறந்த படம் இது: பா.இரஞ்சித்துக்கு அவரது குரு பாராட்டு 

சென்னை: இதுவரையிலான உனது சிறந்த படம் இது என்று பா.இரஞ்சித்துக்கு அவரது குரு  வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் வியாழனன்று  வெளியாகியுள்ளது.இந்தப் படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  கிடைத்துள்ளது. 

இந்நிலையில் இதுவரையிலான உனது சிறந்த படம் இது என்று பா.இரஞ்சித்துக்கு அவரது குரு வெங்கட் பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் பா.இரஞ்சித். அவருடன் 'கோவா' படத்தில் பணியாற்றிய பொழுது, அபபடத்தின் தயாரிப்பாளரான சவுந்தர்யா ரஜினிகாந்துடன் ஏற்பட்ட அறிமுகத்தின் காரணமாகவே, அவருக்கு ரஜினிகாந்தின் கபாலி படத்தினை இயக்கம் வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது காலா படத்தினையும் இயக்கியுள்ளார். 

தற்பொழுது வெளியாகியுள்ள காலா படத்தினை பார்த்து விட்டு இயக்குநர் வெங்கட் பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

என்ன ஒரு படம்! இதை விரும்புகிறேன். இரஞ்சித், உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. என்ன முதிர்ச்சி! என்ன உருவாக்கம்! என்ன தகவல்கள்! என்ன பிரமாண்டம்! என்ன நடிப்பு! என்ன சமநிலை!  என்னைப் பொறுத்த வரை இதுதான் இதுவரையிலான உனது சிறந்த படம்! தலைவா லவ் யூ! தொழில்நுட்ப ரீதியில் பிரமாதம்! நடிப்பில் நானா படேகர்,ஈஸ்வரி ராவ் மற்றும் சமுத்திரக்கனி எனது தேர்வு!

அத்துடன் திலீபன், மணிகண்டன் மற்றும் அவரது தோழியாக நடித்திருக்கும் பெண் ஆகியோரையும் குறிப்பிட வேண்டும். இந்த் கதையின் மீது நம்பிக்கை வைத்து அதை தயாரித்த சகோதரர் தனுஷூக்கு நன்றி. இதனை மிகவும் விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com