டிராபிக் ராமசாமி கதையில் ரஜினியை நடிக்க வைக்க எண்ணினேன்: இயக்குநர் ஷங்கர் பேச்சு!

டிராபிக் ராமசாமி, கத்தி எடுக்காத இந்தியன். வயதான அந்நியன் அம்பி...
டிராபிக் ராமசாமி கதையில் ரஜினியை நடிக்க வைக்க எண்ணினேன்: இயக்குநர் ஷங்கர் பேச்சு!

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வாழ்க்கையை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாகியுள்ளது. விக்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பெயர் - டிராபிக் ராமசாமி. இதில் டிராபிக் ராமசாமி வேடத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ளார். ரோகிணி, பிரகாஷ் ராஜ், ஆர்.கே. சுரேஷ், இமான் அண்ணாச்சி, அம்பிகா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - பாலமுரளி பாலு.

இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். விழாவை முன்னிட்டு  அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு இருந்தது. விழாவில் பேசியவர்கள் சாட்சிக் கூண்டில் நின்றுகொண்டு தான் பேசினார்கள்.

இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஷங்கர் பேசியதாவது:

டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனத்துக்குள் கை தட்டியதுண்டு. 

டிராபிக் ராமசாமியின் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். டிராபிக் ராமசாமி, கத்தி எடுக்காத இந்தியன். வயதான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக்கூட நினைத்தேன். ஆனால் எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com