வருமான வரி வழக்கு: நடிகை த்ரிஷாவுக்கு அபராதம் இல்லை!

இதை ஆய்வு செய்த அதிகாரி, வருவாயை மறைத்து கணக்கு காண்பித்ததன் அடிப்படையில்...
வருமான வரி வழக்கு: நடிகை த்ரிஷாவுக்கு அபராதம் இல்லை!

நடிகை த்ரிஷா 2010-11 ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலின்போது, தொழில் ரீதியாக சிலரிடம் பெற்ற முன் பணத்தை வருவாயாகச் சேர்க்காமல் தனது வருமானம் ரூ. 89.69 லட்சம் எனச் சமர்ப்பித்தார். 

பின்னர், வருமான வரித் துறை அதிகாரிகள் அவருடைய வருமானம் தொடர்பான ஆய்வை தொடங்கிய பின்னர், திருத்தப்பட்ட வருமான விவரங்களை த்ரிஷா தாக்கல் செய்தார். அதில், தான் பெற்ற முன் பணத்தையும், வருவாயாகச் சேர்த்துக் காண்பித்திருந்தார் (வருமானமாக ரூ. 4.41 கோடி). இதை ஆய்வு செய்த அதிகாரி, வருவாயை மறைத்து கணக்கு காண்பித்ததன் அடிப்படையில், வருமான வரிச் சட்டம் 271(1)சி-யின் கீழ் ரூ.1.16 கோடி அபராதம் விதித்தார். 

இந்தச் சட்டப் பிரிவின் கீழ், இவ்வாறு வருவாயை மறைத்து கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு 100 முதல் 300 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடியும். இதை எதிர்த்து வருமான வரி மேல்முறையீடு ஆணையரிடம் நடிகை த்ரிஷா முறையீடு செய்தார். இதை விசாரித்த ஆணையர், த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்தார்.

ஆணையரின் இந்த முடிவை எதிர்த்து தீர்ப்பாயத்தில் வருமான வரித் துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தீர்ப்பாயமும் மேல்முறையீடு ஆணையரின் முடிவையே உறுதி செய்தது. இதை எதிர்த்து வருமான வரித் துறை ஆணையர் (மத்திய வட்டம்) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வருமானத்தை மறைத்ததாக நடிகை த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட ரூ. 1.16 கோடி அபராதத்தை ரத்து செய்த உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பளித்து வருமான வரித் துறையின் மனுவைத் தள்ளுபடி செய்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com