இளம் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் தற்கொலை!

தேஜஸ்வினி அவரது கணவரை காதலித்து மணந்து கொண்டவர். ஆரம்பத்தில் இவர்களது திருமணத்திறகு இரு வீட்டுப் பெரியவர்களின் அனுமதி கிடைக்கவில்லை
இளம் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் தற்கொலை!

விஜயவாடாவைச் சேர்ந்த முன்னாள் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான தேஜஸ்வினி தூக்கிட்டுத் தற்கொலை. ஜூன் 17, ஞாயிறு அன்று மாலை ஆந்திரப் பிரதேசம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த எடுப்புகல்லு கிராமத்தில் வசித்து வந்த முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளினியான தேஜஸ்வினி தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் விஜயவாடாவில் இயங்கி வரும் உள்ளூர் தொலைக்காட்சி சேனலொன்றில் செய்தி தொகுப்பாளராகப் பணியாற்றி வந்தவர்  எனக் கூறப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகு தனது வேலையை விட்ட தேஜஸ்வினி... மகள் மற்றும் கணவருன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் தனது அறைக்கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்ட தேஜஸ்வினி, மாமியார் எத்தனை முறையும் கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமுற்று கதவை உடைத்துப் பார்த்திருக்கின்றனர். இவர்கள் கதவை உடைத்துக் கொண்டு நுழைகையில் தேஜஸ்வினி தனக்குத்தானே தூக்கிட்டுத் தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதும் கூட அங்கே அவர் இறந்து விட்டார் என்ற செய்தியே கிடைத்திருக்கிறது.

தற்கொலைக்கான காரணமாக குடும்பப் பிரச்னையே கூறப்படுகிறது.

தேஜஸ்வினி அவரது கணவரை காதலித்து மணந்து கொண்டவர். ஆரம்பத்தில் இவர்களது திருமணத்திறகு இரு வீட்டுப் பெரியவர்களின் அனுமதி கிடைக்கவில்லை. திருமணத்தை எதிர்த்த குடும்பத்தினரை சமாதானப்படுத்தி காதல் மணம் புரிந்த வெற்றித் தம்பதிகள் இவர்கள். திருமணமாகி கடந்த ஐந்தாண்டுகளில் இவர்களுக்குள் மனவேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அரம்பத்தில் அத்தகைய சச்சரவுகளைப் பெரிதாகக் கருதாத தேஜஸ்வினி தற்போது பிரச்னையைத் தாங்காது தற்கொலை முயற்சியில் இறங்கியிருப்பது கண்டு அவரை அறிந்த உள்ளூர் தொலைக்காட்சி சேனல் வட்டாரமும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தேஜஸ்வினி போன்றே செய்தி தொகுப்பாளராக இருந்து கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட மற்றொரு செய்தி தொகுப்பாளர் ராதிகா ரெட்டி. தன் அபார்ட்மெண்ட் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவரான ராதிகா ரெட்டி தற்கொலைக்கான காரணமாகக் குறிப்பிட்டிருந்தது தனது மன உளைச்சலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com