மிஸ் இந்தியா பட்டம் வென்றார் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அனு கீர்த்தி வாஸ்!

ஒவ்வொரு ஆண்டும் பெமினா பத்திரிகை சார்பில் மிஸ் இந்தியா அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது.
மிஸ் இந்தியா பட்டம் வென்றார் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அனு கீர்த்தி வாஸ்!

ஒவ்வொரு ஆண்டும் பெமினா பத்திரிகை சார்பில் மிஸ் இந்தியா அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்ந்தெடுக்கும் போட்டியின் இறுதிச்சுற்று மும்பையில் நேற்று (ஜூன் 19) நடைபெற்றது. மொத்தமாக 30 பெண்கள் பங்குபெற்ற இப்போட்டியில் இந்திய அழகியை நடுவர் குழு தேர்ந்தெடுத்தனர். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடுவர் குழுவில் ஒருவர்.

சென்னையைச் சேர்ந்த அனு கீர்த்தி வாஸ் (19) 2018-ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டாம் இடத்தில் ஹரியானாவின் மீனா சௌத்ரி மற்றும் மூன்றாம் இடத்தில் ஆந்திராவின் ஷ்ரேயா ராவ் ஆகியோர் இடம் பிடித்தனர். அனு சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ பிரெஞ்ச் படித்து வருகிறார்.

மாடலிங் துறையில் விருப்பமுள்ள அனு கீர்த்தி வாஸ் தற்போது இந்தியா அழகி பட்டத்தை வென்றதன் மூலம், 2019-ம் ஆண்டு நடைபெறும் 'மிஸ் வேர்ல்டு' போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார்.

ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தை தற்போது பெற்றுள்ள அனு கீர்த்திவாஸுக்கு சமூக வலைத்தளங்களிலும் பாராட்டும் ஆதரவும் குவிந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com