தர்மதுரை நாள்களை நினைவுபடுத்தும் ‘கருப்பு’: காலா டீசருக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் புகழாரம்!

காலா டீசர் வெளியாகிவிட்டது. ரஜினியின் அட்டகாசத்தை இன்னொருமுறை காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது... 
தர்மதுரை நாள்களை நினைவுபடுத்தும் ‘கருப்பு’: காலா டீசருக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் புகழாரம்!

ஏப்ரல் 27 அன்று வெளியாகும் காலா படத்தின் டீசர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. 

காலா பட டீசர் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியதாவது:

காலா டீசர் வெளியாகிவிட்டது. ரஜினியின் அட்டகாசத்தை இன்னொருமுறை காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கருப்பு உடை, தர்மதுரை நாள்களை ஞாபகப்படுத்துகிறது என்று புகழ்ந்துள்ளார்.

2.0 படத்தையடுத்து பா. இரஞ்சித் இயக்கத்தில் காலா என்கிற படத்தில் நடித்துள்ளார் ரஜினி. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com