எம்ஜிஆர் சிலை திறப்புடன் தனது அரசியல் அதிரடியைத் தொடங்குகிறாரா ரஜினிகாந்த்?

ரஜினிகாந்த் அரசியல் சார்ந்த பொது நிகழ்ச்சியில் முதன்முறையாக இன்று கலந்து கொள்கிறார். மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்
எம்ஜிஆர் சிலை திறப்புடன் தனது அரசியல் அதிரடியைத் தொடங்குகிறாரா ரஜினிகாந்த்?

ரஜினிகாந்த் அரசியல் சார்ந்த பொது நிகழ்ச்சியில் முதன்முறையாக இன்று கலந்து கொள்கிறார். மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் ரஜினி. இந்நிகழ்ச்சியில் ரஜினி தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மாணவர்களிடையே பேசவிருக்கிறார். மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கவிருக்கிறார்.

அந்நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அதிமுக எம்.பி-யுமான ஏ.சி சண்முகம் தலைமை தாங்குகிறார். கடந்த வாரம் ரஜினிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்வி நிறுவனம் மற்றும் ரஜினி ரசிகர்கள் இணைந்து மிகப் பெரிய அளவில் ரஜினியை வரவேற்கும் ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக மதுரவாயல் அருகே சாலையில் ஆங்காங்கே ரஜினிக்கு பிரம்மாண்ட பேனர்கள் வைத்துள்ளனர்.

தர்மத்தின் தலைவனே வருக ! தமிழகத்தின் எதிர்காலமே ! எங்கள் காலாவே, எங்கள் வாழ்வே! நடத்துனராக இருந்து சிஸ்டத்தை மாற்ற வரும் 'காலா'-வே வருக ! என்றெல்லாம் பேனர்கள் வைத்து அசத்தியிருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள். இந்த சிலை திறப்பு விழாவில் ரஜினி தனது அரசியல் தொடக்கம் குறித்த முக்கிய தகவலை வெளியிடலாம் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com