ட்விட்டரில் நடிகர் சித்தார்த்தை விமரிசனம் செய்த விஜய் ரசிகர்கள்!

தமிழ்த் திரையுலகின் வேலை நிறுத்தம் குறித்து ட்வீட் செய்த நடிகர் சித்தார்த்தை விஜய் ரசிகர்கள் விமரிசனம் செய்துள்ளார்கள்... 
ட்விட்டரில் நடிகர் சித்தார்த்தை விமரிசனம் செய்த விஜய் ரசிகர்கள்!

தமிழ்த் திரையுலகின் வேலை நிறுத்தம் குறித்து ட்வீட் செய்த நடிகர் சித்தார்த்தை விஜய் ரசிகர்கள் விமரிசனம் செய்துள்ளார்கள். 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தத்தின்படி, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் மார்ச் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 'பெப்சி' அமைப்பின் ஒப்புதலுடன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதை அறிவித்துள்ளது. மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம், சினிமா நிகழ்ச்சிகளும், போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடைபெறாது என தமிழக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். அதேபோல தமிழ்நாட்டில் திரைப்படப் படப்பிடிப்புகளும் எதுவும் தற்போது நடைபெறவில்லை. தமிழகத்துக்கு வெளியே மார்ச் 23 வரை படப்பிடிப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் திரையுலகில் வேலை நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கென தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. . இந்தப் படப்பிடிப்பில் ஹைதராபாத் ஸ்டண்ட் கலைஞர்கள் ராம் - லஷ்மண் இடம்பெற்றுள்ளதால் அவர்களுடைய கால்ஷீட்டின் முக்கியத்துவத்தை மதித்து படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மொத்தமாக 4 படங்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் படத்துக்கு மட்டும் படப்பிடிப்பைத் தொடர அனுமதி அளித்தது ஏன் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. நடிகர் சித்தார்த்தும் இதுபோன்று சில படங்களுக்கு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார். 

ஒருவருக்கு சிறப்பு அனுமதி அளிக்கிறீர்கள் என்றால் அதே அனுமதியை அனைவருக்கும் அளியுங்கள். அனைவரும் சமம். சமத்துவமும் ஒற்றுமையும் இல்லாத சூழலில் கடவுள் நம்மைக் காப்பாற்றவேண்டும் என்று கூறியுள்ளார்.

ட்வீட்டில் சித்தார்த் யார் பெயரையும் குறிப்பிடவில்லையென்றாலும் அவர் விஜய்யை முன்வைத்துதான் அந்த ட்வீட்டை வெளியிட்டார் என எண்ணி, விஜய் ரசிகர்கள் சித்தார்த்தை விமரிசனம் செய்து ட்வீட்களை வெளியிட்டார்கள்.

இதையடுத்து சித்தார்த் ட்வீட் வெளியிட்டதாவது:

தமிழ் சினிமாவுக்கு ஒரு பைசா பிரயோஜனம் இல்லாத ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் என்னுடைய ட்வீட்டுக்கு வந்த நூற்றுக்கணக்கான பதில்களைப் படியுங்கள். மோசமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். தேவையில்லாத விஷம், சம்பந்தமில்லாத கோபம். வேலையில்லாத இரு தரப்பு முட்டாள்கள் அனைவருடைய பெயர், நேரத்தை வீணடிக்கிறார்கள். பாவம் விஜய் & அஜித் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com