சினிமா எடிட்டர் டி.ஆர். சேகர் காலமானார்

தமிழ், மலையாள திரைப்படங்களில் சினிமா எடிட்டராக பணிபுரிந்து பிரசித்தி பெற்ற டி.ஆர். சேகர் (81) திருச்சியில் வியாழக்கிழமை காலமானார்.
சினிமா எடிட்டர் டி.ஆர். சேகர் காலமானார்

தமிழ், மலையாள திரைப்படங்களில் சினிமா எடிட்டராக பணிபுரிந்து பிரசித்தி பெற்ற டி.ஆர். சேகர் (81) திருச்சியில் வியாழக்கிழமை காலமானார்.
 பிரசித்தி பெற்ற தமிழ், மலையாள திரைப்பட இயக்குநர்கள் பாசில், சித்திக் ஆகியோருடன் பல்வேறு படங்களில் பணியாற்றியவர்.
 முதல் 3டி படமான மை டியர் குட்டிச்சாத்தான், பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, அரங்கேற்ற வேளை, வருஷம் 16, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, கிளி பேச்சு கேட்கவா, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மலையாளத்தில் 1 முதல் 0 வரை உள்ளிட்ட பல்வேறு படங்களில் எடிட்டராக பணியாற்றியவர்.
 பல்வேறு படங்களில் பணிபுரிந்தாலும் தனது உதவியாளர்களது பெயரையே எடிட்டர் என பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தினார்.
 வருஷம் 16 திரைப்படத்துக்காக தமிழக அரசின் சிறந்த சினிமா எடிட்டர் விருது, 1 முதல் 0 வரை என்ற மலையாளப்படத்துக்கு கேரள அரசின் சிறந்த சினிமா எடிட்டர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.
 இவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்கு வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. மாலையில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஓயமாரி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com