நடிகர் சூர்யாவை வம்புக்கு இழுக்கும் தயாரிப்பாளர் எஸ்.சசிகாந்த்

விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள எஸ்.சசிகந்த் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது
நடிகர் சூர்யாவை வம்புக்கு இழுக்கும் தயாரிப்பாளர் எஸ்.சசிகாந்த்

விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள எஸ்.சசிகாந்த் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, சில நடிகர்கள் தங்களை இயக்கிய இயக்குநர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கும் ட்ரெண்டு உருவாகியுள்ளது. அந்த இயக்குநர்களுக்கு கார்களை பரிசாக அளித்து, ஊடகங்களில் அதை விளம்பரப்படுத்துகிறார்கள், அந்தப் படம் ஒரு தோல்விப் படமாக இருந்தாலும் கூட என்று கூறியிருக்கிறார்.

நடிகர் சூர்யா, பாண்டிராஜ், ஹரி மற்றும் விக்னேஷ் சிவன் என அவரது இயக்குனர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியிருக்கிறார். ஆனால் சசிகாந்த் பெயர் குறிப்பிடாமல் அவ்விஷயத்தை மறைமுகமாக சாடியிருக்கிறார். பாக்ஸ் ஆபிஸ் ஹிட், வசூல் அறிக்கைகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, சசிகாந்த் கூறியது, 'ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் சில சமயங்களில் நாம் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறோம். மாறாக, அந்த வெற்றியை அமைதியாக வீட்டில் கொண்டாட வேண்டும். சினிமாவில் கூட்டாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஒன்றாக வேலை செய்கிறோம், போராடி தான் வெற்றியை அடைய முடிகிறது. எனவே அது கொண்டாடப் பட வேண்டியதுதான். ஆனால் அதை விளம்பரப்படுத்தி ஆதாயம் தேட நினைப்பதுதான் தவறு. ஒரு முன்னணி நடிகர் அவரது இயக்குநருக்கு ஒரு காரை பரிசளித்துள்ளார். இது என்ன ஒரு புது விஷயமா? இதையே வழக்கமாகத் தான் செய்து கொண்டிருக்கிறார். நான் இதுவரையில் 12 படங்களைத் தயாரித்துள்ளேன், ஒவ்வொரு படமும் வித்தியாசமான வெற்றியை ருசித்திருக்கிறது. வெற்றி பெற இங்கு அதிகம் போராட வேண்டியிருக்கிறது’ என்று கூறினார் சசிகாந்த்.

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D  எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் சசிகாந்தின் இந்தப் பேச்சுக்கு  பதிலடி கொடுக்கும் விதமாக, 'தன் படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் இயக்குனருக்கு முழு சம்பளத்தை கூட ஒழுங்காகத் தராத ஒருவர், பரிசுகளைப் பற்றி பேசுகிறார்!! இதுதான் நகைப்புக்குரிய முரண்!!’ என்று கூறியிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com